Asianet News TamilAsianet News Tamil

முதல் நாளே இந்தியாவின் பிரகாசம் ஆரம்பமாகிவிட்டது.. வெள்ளி பதக்கம் வென்ற மீராபாய் சானுவிற்கு முதல்வர் வாழ்த்து

ஜப்பான் டோக்யோ ஒலிம்பிக் போட்டித் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Tokyo Olympics... Weightlifter Mirabai Chanu Wins 1st Medal...CM Stalin greeting
Author
Tamil Nadu, First Published Jul 24, 2021, 1:41 PM IST

ஜப்பான் டோக்யோ ஒலிம்பிக் போட்டித் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2021ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில், மகளிருக்கான பளுதூக்கும் போட்டி இன்று நடைபெற்றது.இதில் 49 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா வெல்லும் முதல் பதக்கம் இதுவாகும்.

Tokyo Olympics... Weightlifter Mirabai Chanu Wins 1st Medal...CM Stalin greeting

இதே எடைப் பிரிவில் சீன வீராங்கனை ஹூ ஜிஹி தங்கப் பதக்கமும், இந்தோனேசிய வீராங்கனை கேண்டிக் விண்டிங் வெண்கல பதக்கம் வென்றார். வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய்க்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். 

Tokyo Olympics... Weightlifter Mirabai Chanu Wins 1st Medal...CM Stalin greeting

இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- ஒலிம்பிக்கின் முதல் நாளிலேயே இந்தியாவுக்கு ஒரு பிரகாசமான ஆரம்பம். எனது மனமார்ந்த வாழ்த்துகள் மீராபாய் சானு. தனது சிறந்த திறமையால் இந்தியாவுக்கு பளுதூக்குதலில் முதல் ஒலிம்பிக் சில்வர் பதக்கத்தை வென்றவர் என குறிப்பிட்டார்.

Follow Us:
Download App:
  • android
  • ios