லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் கூட்டணி அமைக்கப்படும்: தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். 

(ஆஹா! என்ன ஒரு எக்ஸ்க்ளூசிவ் அறிவிப்பு இது! இத சொல்றதுக்காண்ணே சென்னையில இருந்து ஃபிளைட்டு பிடிச்சு மதர வந்து எறங்குனீக? ஒத்த வார்த்த சொன்னாலும் மத்தவய்ங்க வார்த்தையெல்லாம் பிச்சை எடுக்குற மாதிரி சொன்னீக பாருங்க!)

*     மாவட்ட நிர்வாகம் நடத்தும் ஆய்வு கூட்டங்களில் வெளிப்படைத் தன்மை இல்லை. ரகசியமாக கூட்டத்தை நடத்துவதன் மூலம் என்ன நன்மை கிடைத்துவிட போகிறது?: எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம். 

(சரி சரி அண்ணன் வேற ஏதோ எதிர்பார்க்குறா மாதிரி தெரியுது. ஆளும் தரப்புக்கு சிக்னல் கொடுக்குறா மாதிரியும் புரியுது)

*    மோடியை பிரதமராக ஏற்றுக் கொள்ளும் எந்த கட்சிகளுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம்: தமிழிசை. 
(அது சரிக்கா! ஆனா அந்தக் கட்சிக்காரங்க ‘மக்கள் அதுக்கு தயாரா இல்லையே!’ன்னு சொல்லிக்கிட்டு வேற ரூட்டு போட்டாய்ங்கன்னு வெய்யுங்க, நீங்க இன்னா பண்ணுவீங்க)

*    கொடநாடு விவகாரத்தில் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் உள்ள ரெண்டு பேர்  முதல்வர் மீது குற்றம் சுமத்தும் போது அவர் ஏன் பயப்பட வேண்டும்?: டி.டி.வி. தினகரன். 

(ஏண்ணே, எடப்பாடியார் தும்மல் போட்டாலுங் கூட அடுத்த நொடியே ‘துரோக தும்மல்’ன்னு அறிக்கை விடுற நீங்க, இந்த விஷயத்துல மட்டும் சில மணி நேரம் கழிச்சு வாய தொறந்தது ஏன்? அதுக்குள்ளே எங்கேயெல்லாம் டிஸ்கஸ் பண்ணி டவுட்ஸை க்ளியர் பண்ணுனீங்க?ன்னு எதிர்கட்சிக்காரய்ங்க கேக்குறாய்ங்க.)