*    நாடாளுமன்ற கட்டிடத்தில் முத்துராமலிங்க தேவருக்கு சிலை உள்ளது. சமீபத்தில் சுப்பிரமணியன் சாமி அதற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது ’இங்கே இருக்கிற அ.தி.மு.க. எம்.பி.க்கள் தேவர் சிலையை கண்டுக்கலை’ என்று சாமியிடம் வருந்தினார்களாம் டெல்லி வாழ் தமிழர்கள் சிலர். அதற்கு ”அ.தி.மு.க. காரங்கோ தேவரை ஓட்டுக்கு மட்டுமே பயன்படுத்துறாங்கோ! மதுரை ஏர்போர்ட்டுக்கு அவரது பெயரை வைக்க செண்ட்ரல் கவர்ன்மெண்டுக்கு அவங்க எந்த பிரஷரும் கொடுக்குறதில்லை. இனிமே அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போடாதீங்கோ.” என்றாராம். 

*    சர்கார் படக்கதை விவகாரம் பாக்யராஜின் பதவியையே காவு வாங்கிவிட்டது. இந்நிலையில் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பாக்யராஜூக்கு எதிராக பெரும் கைகள் செயல்பட்டிருப்பது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. ஆர்.கே.செல்வமணியெல்லாம் ‘சங்கத்தில் பிரச்னைகள் இல்லை. அப்படி இருப்பதாக நினைத்தால், பாக்யாராஜ் அதை வெளிப்படையாக சொல்ல வேண்டும்.’ என்று சொல்லியிருப்பது, பாக்யராஜை பெரிதும் வருத்தப்பட வைத்துள்ளது. 

* நடிகை சுஜா வருணி, சிவாஜி கணேசனின் மகன் வழி பேரனை காதலிக்கிறார். வரும் 19-ல் திருமணம். இந்த திருமணத்தை முன் நின்று நடத்திட ‘பிக்பாஸ்’ கமல்ஹாசனை அழைத்திருக்கிறார், அவரும் சம்மதித்திருக்கிறார். கமல் இதை ஏற்றுக் கொண்டதில் ஏனோ ‘அன்னை இல்லம்’ வட்டாரத்தினுள் மனக்கசப்பாம். 

* உதயநிதியை சற்று வேகமாக அரசியலில் செயல்படுமாறு அறிவுறுத்தி இருக்கிறாராம் ஸ்டாலின். விரைவில் தமிழகமெங்கும் மாவட்ட தலைநகரங்களில் உதய் தலைமையிலான கூட்டங்கள் உறுதி! என்கிறார்கள். 

*  கமல்ஹாசனின் மக்கள் மய்யத்தில் ‘எல்லா முடிவுகளையும் கமலே எடுக்கிறார், அறிவிக்கிறார்!’ என்று முக்கிய தலைகள் சிலர் பொறுமுவதாக தகவல் வந்த நிலையில், சில இடங்களிலோ கட்சி கமல்ஹாசனின் கட்டுப்பாட்டிலேயே இல்லை, கட்சி மற்றும் கமலின் பெயரை வைத்துக் கொண்டு தேவையில்லாத விஷயங்கள் பல நடக்கின்றன! என்று தலைமைக்கு புகார் வந்துள்ளது.