Asianet News TamilAsianet News Tamil

சென்னை வந்தார் ஆளுநர்...!!! - முட்டி மோதும் அரசியல் கட்சிகள்...!!!

Today Governor Vidyasagar Rao has come to Chennai from the scene of the sensational political situation.
Today, Governor Vidyasagar Rao has come to Chennai from the scene of the sensational political situation.
Author
First Published Aug 26, 2017, 5:41 PM IST


பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மும்பையில் இருந்து இன்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை வந்துள்ளார். 

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் கடந்த 22–ந் தேதி கிண்டி ராஜ்பவனுக்குச் சென்று கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்தனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அந்தப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று தனித்தனியாக மனு கொடுத்தனர்.  ஆனால் இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்காமல் ஆளுநர்  மும்பைக்கு சென்றுவிட்டார்.

மனு கொடுத்த எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரிக்கு சென்று நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர். தற்போது டி.டி.வி.தினகரன் தரப்பு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

இந்த சூழ்நிலையில், அரசு பெரும்பான்மையை இழந்துவிடும் என்றும், அதனால் அரசு தொடர்ந்து நீடிப்பதில் பிரச்சினை ஏற்படும் என்றும் அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர்.

பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள், சட்டசபையை உடனே கூட்டவேண்டும் என்றும், அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மும்பையில் இருந்து இன்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை வந்துள்ளார். 
அண்ணாபல்கலை கழகத்தில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சி ஒன்றில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொள்ள உள்ளார்.

அதன்காரணமாகவே ஆளுநர் சென்னை வந்துள்ளாதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
இதைதொடர்ந்து அரசியல் கட்சிகள் ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டு கோரிக்கை விடுத்து வருகின்றனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios