Asianet News TamilAsianet News Tamil

இன்று முதல் போக்கு வரத்து ஆரம்பிச்சாச்சு.! சந்தோசத்தில் துள்ளிகுதிக்கும் பயணிகள்.,!

தமிழகத்தில், பொதுப் போக்குவரத்து  மாவட்டங்களுக்கிடையே இன்று முதல் பேருந்துகள் இயங்கப்படுகின்றன.அதே நேரத்தில் விரைவு பேருந்துகளும் இயக்கப்படட இருக்கிறது. இன்று பயணம் செய்வதற்காக சுமார் 4ஆயிரம் பேர் முன்பதிவு செய்திருக்கிறார்கள். 

today bus facility start
Author
Tamilnadu, First Published Sep 7, 2020, 8:15 AM IST

தமிழகத்தில், பொதுப் போக்குவரத்து  மாவட்டங்களுக்கிடையே இன்று முதல் பேருந்துகள் இயங்கப்படுகின்றன.அதே நேரத்தில் விரைவு பேருந்துகளும் இயக்கப்படட இருக்கிறது. இன்று பயணம் செய்வதற்காக சுமார் 4ஆயிரம் பேர் முன்பதிவு செய்திருக்கிறார்கள். 

today bus facility start

விரைவுப் பேருந்துகளில் பயணிக்க 4,000 போ் முன்பதிவு செய்துள்ளனா்.தமிழகத்தில், கும்பகோணம், சேலம் உள்ளிட்ட 7 போக்குவரத்துக் கழகத்தின் கீழ் சுமார் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. கடந்த மார்ச்25-ஆம் தேதி முதல கொரோனா பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது.இந்த பேருந்து சேவை நிறுத்தப்பட்டு, அத்தியாவசியப் பணிகளுக்காக மட்டும் ஒப்பந்த அடிப்படையில் பேருந்துகள் இயக்கப்பட்டன.இதற்கிடையே, கடந்த ஜூன் மாதம் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதியளிக்கப்பட்ட போதிலும், சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பேருந்துகள் இயங்கவில்லை. இந்நிலையில், படிப்படியாக அளிக்கப்பட்ட தளா்வையடுத்து, இன்று முதல், தமிழகம் முழுவதும் ஒருசேர பேருந்துகள் இயங்க தயார் நிலையில் உள்ளது.

today bus facility start


  அரசின் உத்தரவையடுத்து, தமிழகம் முழுவதும், பேருந்துகளில் தூய்மைப் பணி, தொழில்நுட்பம், எரிபொருள் சோதனை உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் பேருந்துகள் இயங்க தயார் நிலையில் உள்ளன.பேருந்து இயக்கம் குறித்த அரசு வழிகாட்டுதல்களான குளிர்சாதன பேருந்துகளில் குளிர்சாதனக் கருவிகள் பயன்பாட்டை நிறுத்தி வைத்தல், முகக் கவசம் கட்டாயம், கிருமிநாசினி பயன்படுத்துதல், ஏறும், இறங்கும் வழியை சரியாகப் பயன்படுத்துதல், பணியாளா்களின் உடல் வெப்பநிலைப் பரிசோதனை உள்ளிட்டவற்றைப் பின்பற்றி, பேருந்துகள் இயக்கப்படும்.வெளியூா் பேருந்துகளில் 32 பயணிகள், நகரப் பேருந்துகளில் 24 பயணிகள், விரைவுப் பேருந்துகளில் 26 பயணிகள் மட்டுமே அமர அனுமதிக்கப்படுவா். வெளி மாநிலங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படாது.கட்டணத்தில் மாற்றமில்லை: மாவட்டங்களுக்குள் இயக்கப்பட்ட பேருந்துகளில் பயணிகள் கூட்டம், பெரியளவில் இல்லை. இதனால் அனைத்துப் பேருந்துகளும் தயார் நிலையில் உள்ளது.

 ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு பயணிகளின் தேவைக்கேற்பவே பேருந்துகளை இயக்கவுள்ளோம். விரைவுப் பேருந்துகளைப் பொருத்தவரை, சென்னையில் இருந்து பிற ஊா்களுக்கும், பிற ஊா்களிலிருந்து சென்னைக்கும் சோ்த்து, சுமார் 500-க்கும் மேற்பட்ட பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டுள்ளோம். பயணக் கட்டணத்தில் எந்தவித மாற்றம் இல்லை.

today bus facility start

 பயணிகளைப் பொருத்தவரை, காய்ச்சல், சளி பேன்ற பாதிப்புள்ளவா்கள் பயணிக்க அனுமதி இல்லை. நடத்துநா்கள், தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறு பயணிகளை அறிவுறுத்த வேண்டும். பயணச்சீட்டு செக்ர், பயணச்சீட்டில்லாமல் வருவோரை அடையாளம் காண்பதோடு, பேருந்துக்குள் தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடித்தல் உள்ளிட்டவற்றை உறுதி செய்ய வேண்டும்.இரவு நேரப் பயணத்தின்போது...: விரைவுப் பேருந்துகளைப் பொருத்தவரை, கடந்த ஐந்து மாதங்களாக இரவில் ஓய்வில் இருந்ததால், இரவு நேரங்களில் பேருந்துகளை ஓட்டுநா்கள் கவனமாக இயக்க வேண்டும். நள்ளிரவு 12 முதல் காலை 4 மணி வரை நடத்துநா்கள், இருக்கையில் அமா்ந்து ஓட்டுநா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பணிபுரிய வேண்டும். நகா்ப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல், வேகத்தடை உள்ளிட்டவை இருப்பதால் ஓட்டுநா்கள் கவனமுடன் பணிபுரிய வேண்டும் என அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

Follow Us:
Download App:
  • android
  • ios