விருதுநகரில் OMS பருப்பு மில் உரிமையாளர் வேல்முருகன் வீட்டுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். வேல்முருகனின் உறவினர் கலைச்செல்வி வீட்டில் நடந்த சோதனையை அடுத்து அமாலக்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

விவசாயிகளிடம் கருத்து கருத்துக் கேட்க வந்த யாதவை கைது செய்ததற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்கள் கருத்துக்களை பயமின்றி எடுத்துச் சொல்லும் சூழல் வர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

விழுப்புரம்  அருகே கணவர்கள் மது குடிக்க தொலைதூரம் செல்லும் நிலையை தவிர்க்க மூடிய டாஸ்மாக் கடையை திறக்க பெண்கள் கோரிக்கை.

டிகர் கார்த்திக் மதுரையில் புதிய கட்சி அறிவிப்பை வெளியிடுகிறார். முன்னதாக பசும்பொன்னில் தேவர்நினைவிடத்தில் சற்றுமுன் அஞ்சலி செலுத்தினார்.

தமிழகம் முழுவதிலும் உள்ள ஆறுகளை இணைக்க ரூ.7,500 கோடிக்கு வரைவுத் திட்டம் தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் நிதிக் குழுவிடம் அளிக்கப்பட்டிருப்பதாக தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

ராமநாதபுரம், சிவகங்கை நாகை திருச்சி உள்ளிட்ட ,மாவட்டங்களைச்சேர்ந்த 54 பேருக்கு நார்வே நாட்டில் இரானுவத்தில்  வேலை, வாங்கித்தருவதாக  கூறி   விழுப்புரத்தைச் சேர்ந்த ஹரி,நாகர் கோயிலைச்சேர்ந்த முனியசாமி ஆகிய இரண்டுபேர்   54 பேரிடம்  தலா ரூ இரண்டு  லட்சம் வீதம் மொத்தம்  ஒரு கோடியே 62 லட்சம் செலுத்தி இலங்கை சென்றுள்ளனர். நார்வே நாட்டிற்க்கு செல்ல முடியாமல்.இவர்கள் கடந்த மாதம் 24ந்தேதி முதல்  இலங்கை கொழும்புவில்   சாப்பாடு,தண்ணீர்  இன்றி   தவித்துவ்ல்ருவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுவையில் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், குறிப்பிடத்தக்க அளவுக்கு எங்கும் மழை பதிவாகவில்லை. வெப்பநிலை வழக்கத்தைவிடச் சற்று குறைவாகவே காணப்படும். சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இன்று அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகும்" என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் யு.எஸ்.ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதில் மகளிர் பைனலில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், ஜப்பானின் நவோமி ஓசாகா மோதினர். இதில் துவக்கத்தில் செரினா வில்லியம்ஸ் ஆதிக்கம் செலுத்தினார். சுதாரித்துக்கொண்ட ஒசாகா அடுத்தடுத்து, 6-2, 6-4, என இரண்டு செட்களில் செரினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.