Today Asinet political Bit news
பொறி பறக்கும் அரசியல் நிகழ்வுகளுக்கு நடுவில் ‘ஏஸியாநெட் இணைய தள’ வாசகர்களுக்காக செம்ம ஸ்பீடு மைக்ரோ பேட்டிகள்...
* உண்மையான, நேர்மையான, நாணயமான, ஜாதி மதசார்பற்ற அரசியலே ஆன்மிக அரசியல்.
- நடிகர் ரஜினிகாந்த்
* ரஜினியின் பேட்டி தெளிவு இல்லாததைப் போல் உள்ளது. அவரது ஆன்மிக அரசியல் எடுபடாது.
- புதுவை முதல்வர் நாராயண சாமி
* ராணுவத்தில் உள்ளவர்கள் தினமும் சண்டையிடுகின்றனர். சண்டையில் அவர்கள் இறப்பது சகஜம்.
- பி.ஜே.பி. எம்.பி. நேபாள் சிங்

* ஆர்.கே.நகர் களத்தில் தி.மு.க. முறையாக ஓட்டு சேகரித்திருந்தால் அ.தி.மு.க. டெப்பாசிட் இழந்திருக்கும். தி.மு.க.வின் மெத்தனத்தால் அ.தி.மு.க. தப்பியது
- டி.டி.வி. தினகரன்
* எனது தோழி கவுரி லங்கேஷின் படுகொலையக்கு பிறகு தான் அநீதியை எதிர்த்து குரல் கொடுக்க துவங்கினேன். எனக்கு அரசியல் ஆசை கிடையாது. ஆனால் நிர்பந்தம் செய்தால் அரசியலுக்கு வர தயங்கிட மாட்டேன்.
- நடிகர் பிரகாஷ் ராஜ்.
* விசாரணை கமிஷனுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். மற்ற விஷயங்களை பகிர்வது சரியாக இருக்காது. ஜெ., சிகிச்சை தொடர்பாக வீடியோ ஆதாரம் இருப்பதாக நான் கூறவில்லை.

- இளவரசி மகள் கிருஷ்ணப்ரியா
* எம்.ஜி.ஆர். தன் எண்ணங்களையும், நோக்கஙக்ளையும் செயல்படுத்திய மாமனிதர். அவரது உன்னதமான திட்டங்களால், ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் மனதில் நிரந்தரமான இடம் பிடித்தார்.
- கவர்னர் புரோஹித்
* அ.தி.மு.க.வின் ஓட்டு வங்கியிலிருந்து ஒரு ஓட்டை கூட ரஜினி உட்பட யாரும் பெற முடியாது.
- அமைச்சர் ஜெயக்குமார்.
* ஆர்.கே.நகர் தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் வரலாம். வந்தால் அதையும் சந்திப்போம். அனைவரும் அ.தி.மு.க.வுக்கு விசுவாசமாக இருப்பர்.
- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
* என்மீது வன்மம் கொண்ட சிலர் ‘வைகோ ஆதரித்ததால்தான் ஆர்.கே.நகரில் தி.மு.க. டிபாசிட் இழந்தது.’ என பேசி வருகின்றனர். அது பற்றியெல்லாம் நான் கவலைப்பட மாட்டேன்.
- வைகோ
