Asianet News TamilAsianet News Tamil

"வட இந்திய சத்ரியர் யோகிக்கு, வன்னிய குள சத்திரியர்களின் வாழ்த்துக்கள்".. கண்ணை கட்டவைக்கும் போஸ்டர்.

அந்த வகையில் உத்திரப்பிரதேச மாநில முதல்வராக மீண்டும் யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக பதவியேற்க உள்ள நிலையில் வன்னிய குல சத்திரிய மரபினர் என்ற பெயரில் யோகி ஆதித்யநாத்துக்கு இங்குள்ள வன்னிய அமைப்புகள் வாழ்த்து தெரிவித்து போஸ்டரில் அடித்துள்ளன. 

To the North Indian Chatriyan Yogi .. Greetings from the Vanniya Chatriyas .. viral poster.
Author
Chennai, First Published Mar 17, 2022, 11:11 AM IST

உத்திரபிரதேசத்தின் முதல்வராக  மீண்டும் முடி சூடயிருக்கும் வட இந்திய ராஜபுத்திரர் ஷத்ரியர் யோகி ஆதித்யநாத் அவர்களுக்கு தென்னிந்திய வன்னிய குல சத்திரியர்கள் இன் வாழ்த்துக்கள் என அச்சிடப்பட்ட போஸ்டர்  சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது உத்திரப்பிரதேச மாநிலத்தில் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் இரண்டாவது முறையாக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த வன்னிய அமைப்புகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர் ஓட்டி வருகின்றனர்.

யார் இந்த யோகி ஆதித்யநாத்:

எப்போதும் சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு பெயர் போனவர்தான் யோகி ஆதித்யநாத்.  இவர் முதல்வர் என்பதையுத் தாண்டி தீவிர இந்துத்துவாவின் முகமாக இருந்து வருகிறார். கோரக்பூர் தொகுதியில் ஐந்தாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1992 ஆம் ஆண்டு தீவிர அரசியலில் இறங்கிய ஆதித்யநாத் அதே ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்ற நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார். தனது 26 வயதில் எம்.பியாக தேர்வான யோகி ஆதித்யநாத்  1990 களில் ராமர் கோவில் விவகாரத்தில் தீவிரமாக செயல்பட்ட எம்.பி  மகந்த் ஆதித்யநாத்தை தனது குருவாக ஏற்றுக் கொண்டார்.

இதையும் படியுங்கள்: " மின்சார வாரியத்தில் ஷாக்கடிக்கும் ஊழல்" அண்ணாமலை வெளியிட்ட பகீர் அறிக்கை..

To the North Indian Chatriyan Yogi .. Greetings from the Vanniya Chatriyas .. viral poster.

அதனால் தனது இயற்பெயரான அஜய் மோகன் பிஸ்ட்  என்பதை, யோகி ஆதித்யநாத் என மாற்றிக் கொண்டார். பல்வேறு சர்ச்சைக்குரிய வழக்குகள் இவர் மீது இருந்தது. மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் ருக்கியா என்ற கிராமத்தில் சுடுகாட்டை கைப்பற்றிய இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட காரணமாக இருந்தவர் என்ற வழக்கு அவர் மீது இருந்தது. கோரக்பூரில் இந்து இளைஞர் படுகொலை தொடர்பாக அவர் பேசிய பேச்சால் முஸ்லிம் இளைஞர்கள் கொல்லப்பட்டனர். அந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல லவ் ஜிஹாத் தொடர்பாக அவரது பேச்சுக்கள் பெரும் சர்ச்சைக்குரியவையாகும். கோரக்நாத் கோவிலின் தலைமைப் பூசாரியாகவும் அவர் இருந்து வருகிறார். கடந்த 2014ஆம் ஆண்டு பாஜகவின் நட்சத்திர பேச்சாளர் பட்டியல் கூட இடம் பெறாத அவர் கட்சியின் முன்னோடிகளையெல்லாம் ஓரம் கட்டிவிட்டு உத்திர பிரதேசத்தில் 21வது முதலமைச்சராக பதவியேற்றார். இந்நிலையில்தான் 2022ஆம் ஆண்டு மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு அவர் முதல்வராக பதவியேற்கவுள்ளார்.

வன்னிய அமைப்புகள் வாழ்த்து: 

அவருக்கு பலரும் வாழ்த்துக் கூறி வருகின்றனர். அந்த வகையில் உத்திரபிரதேசத்தின் முதல்வராக  மீண்டும் முடி சூட இருக்கும் வட இந்திய ராஜபுத்திரர் ஷத்ரியர் யோகி ஆதித்யநாத் அவர்களுக்கு தென்னிந்திய வன்னிய குல சத்திரியர்களின் வாழ்த்துக்கள் என அச்சிடப்பட்ட போஸ்டர்  சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.

அதாவதுஜெய்பீம் திரைப்படத்துக்கு எதிராக பாமக,  வன்னிய அமைப்புகள் போராட்டம் நடத்திய நிலையில், அப்போது வட இந்தியாவை சேர்ந்த சில சத்திரிய அமைப்புகள் அப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தன. நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்காவிட்டால் நாடு முழுவதும் இருந்தும் சத்திரியர்கள் சென்னைக்கு புறப்பட்டு வருவோம் என அந்த அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தன. அப்போது அது பேசுபொருளானது. அதாவது தலித் சமுதாயம் தேசிய அளவில் பரவி விரவி இருப்பதுபோல தங்களது ஷத்ரிய சமுதாயமும் தேசிய அளவில் உள்ளது என இங்கு உள்ள வன்னிய அமைப்புகள் கூறி வருகின்றன.

To the North Indian Chatriyan Yogi .. Greetings from the Vanniya Chatriyas .. viral poster.

இதையும் படியுங்கள்: Samantha Pushpa song: கோடிகளில் வியூஸை குவித்த சமந்தாவின் புஷ்பா பட பாடல்..! ஒரே ஸ்டேப்...வேர்ல்ட் ஹிட்..!

அந்த வகையில் உத்திரப்பிரதேச மாநில முதல்வராக மீண்டும் யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக பதவியேற்க உள்ள நிலையில் வன்னிய குல சத்திரிய மரபினர் என்ற பெயரில் யோகி ஆதித்யநாத்துக்கு இங்குள்ள வன்னிய அமைப்புகள் வாழ்த்து தெரிவித்து போஸ்டரில் அடித்துள்ளன. யோகி ஆதித்யநாத் பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் ஒன்றான தாகூர் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். எனவே அவர் வட இந்தியாவின் சத்திரிய குலம் என்றும், அவர் வட இந்திய ராஜபுத்திரர் என்றும் எனவே அவருக்கு தென்னிந்திய ஷத்ரியர்களின் வாழ்த்துக்கள் என அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios