பா.ஜ.க ஆளும் மாநிலமான உத்திர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் முதல்வராக ஆட்சி செய்து வருகிறார். இதனால் பா.ஜ.கவின் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு வகை தூய்மை நலத்திட்டங்களை ஊக்கப்படுத்தி வருகிறது. மோடி தலைமையிலான அரசு நான்காவது வருடத்தை எட்டிய நிலையில் உத்திர பிரதேசத்தில் விசித்திரமான அறிவிப்பை செய்துள்ளார் சீதப்பூர் மாவட்ட ஆட்சியர். 

அனைவரது வீட்டிலும் கழிப்பறை அவசியம் என பல்வேறு வகையில் பிரச்சாரம் செய்து வந்தாலும் மக்களில் பெரும்பாலனவர்கள் அதைக் கடைப்பிடிப்பதில்லையென  ஆட்சியர் கருதினார். இதனால் பொதுமக்களுக்கு உதாரணமாக அரசு வேலை செய்பவர்கள் உதாரணமாக இருக்கவேண்டுமென கருதி வித்தியாசமான செயலில் இறங்கியுள்ளார்.

உத்திர பிரதேசத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் வேலை செய்யும் அலுவலர்கள் மே மாதத்திற்குள் கழிப்பறை கட்டவேண்டும் என்றும் அப்பிடிக் கட்டினால் தான் சம்பளம் வழங்கப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார். சீதப்பூர் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் வேலை செய்பவர்கள்  தஙக்ள் வீட்டில் கழிப்பறையை கட்டாயம் கட்டவேண்டும் என்றும் அவ்வாறு கட்டி நல்ல வெளிச்சதில் கழிப்பறை முன் நின்று செல்பியை எடுத்து ஆட்சியரிடம் காண்பிக்க வேண்டும். அப்படி காண்பித்து ஒப்புதல் அளித்தால்தான் அவர்கள் மே மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.