To organize co-operative union elections properly! DMK who petitioned to the dog
பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்க தேர்தலை முறையாக நடத்தக்கோரி, திமுகவினர் நாயிடம் மனு கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம்
பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கூட்டுறவு தேர்தலின்போது ஓட்டுப் பெட்டிகள் உடைப்பு, தேர்தல் ஆவணங்களுக்கு தீ வைப்பு, அதிகாரிகளைத் தாக்குவது போன்ற முறைகேடுகள் நடந்தன. இதனைக் கண்டித்து போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தலை முறையாக நடத்துங்கள் என்று நாயிடம், திமுகவினர் மனுக் கொடுத்துள்ளனர்.
ல் நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள சில கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடைபெறவில்லை. இந்த நிலையில், கூட்டுறவு சங்க தேர்தலை முறையாக நடத்தக்கோரி பெரம்பலூர் மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் 2-வது நாளாக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கூடினர்.

பின்னர், கூட்டுறவு சங்கத்தின் மண்டல இணைப் பதிவாளர் அலுவலகத்தில் கூடி, அங்கு அதிகாரிகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அதிமுகவினருக்கு, அதிகாரிகள் துணைப் போவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். இதன் பின்னர், அங்கு திரிந்து கொண்டிருந்த நாயிடம், கூட்டுறவு சங்க தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கை மனுவை கொடுத்து நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இது குறித்து திமுகவினர் பேசும்போது, நாங்கள் தொடர்ந்து இரண்டு, மூன்று நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறோம். பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்று தேர்தல் அலுவலர்கள் கூறினர். இதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தைக்காக கூட்டுறவு சங்க அலுவலகத்துக்கு வந்தோம். ஆனால், அலுவலர்கள் யாரும் இல்லை.
எனவே, இதைக் கண்டித்தும் தேர்தல் முறையாக நடத்தக் கோரியும் நாயிடம் மனு கொடுத்தோம். நாய் நன்றியுள்ள பிராணி. விசுவாசமாக நேர்மையாக நடந்து கொள்ளும். ஆனால், இங்குள்ள அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் சரியாக நடந்து கொள்ளவில்லை என்று திமுகவினர் அப்போது குற்றம் கூறினர்.
