To give up the hydrocarbon - Prime Minister met Chief Urges ....

தமிழகத்தில் மத்திய அரசு கொன்றுவர இருக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார்.

தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் பேசுவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று டெல்லி சென்றார். சென்னையிலிருந்து நேற்றிரவு விமானம் மூலம் டெல்லி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கினார்.

இதையடுத்து இன்று மாலை பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார். அப்போது, நீட் தேர்வு, வர்தா புயல், வறட்சி நிவாரணம், ஹைட்ரோ கார்ப்பன் திட்டம் குறித்து பிரதமரிடம் மனு அளித்தார்.

தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் குறித்தும், மருத்துவ பொது நுழைவுத் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில் சட்டப் பேரவையில் கொண்டு வரப்பட்ட சட்ட முன்வடிவுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்தும் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினார்.

இந்த சந்திப்பின்போது முதல்வர் தனி செயலாளர் சிவதாஸ் மீனா, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நிதித்துறை செயலாளர் சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.

தனது இரண்டு நாள் டெல்லி பயணத்தில் மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, நிதின் கட்கரி, ரவிசங்கர் பிரசாத் , பியூஸ் கோயல் உள்ளிட்டோரையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.