ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்று, குன்னம் தொகுதி எம்எல்ஏ ராமசந்திரன் கூறியுள்ளார்.

பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், குன்னம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ராமசந்திரன் இன்று செந்துறையில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, அதிமுக ஆட்சி நடக்கும்போதே அதிமுகவின் இரு அணியில் உள்ள எம்எல்ஏக்கள் ஊழல் ஆட்சி என்று கூறி வருகின்றனர். இது வெட்கக்கேடான செயல்.

தமிழக முதலமைச்சர் யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல் ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க வேண்டும்.

ஜெயலலிதா ஆட்சி வர வேண்டும் என எண்ணுபவர்கள், துணிவு இருந்தால் ஜெயலலிதா பெயரையும், சசிகலா பெயரையும், சொல்லி தேர்தலை சந்திக்கட்டும் என்று கூறிய அவர் இது என்னுடைய தனிப்பட்ட கருத்து என்று தெரிவித்துள்ளார்.