திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதியின் இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் மனுதாக்கல் செய்துள்ளனர்.
திமுக இளைஞரணி அலுவலகமான அன்பகத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில் பேசிய திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி, தலித்துகள் நீதிபதிகள் ஆனது திராவிட இயக்கம் போட்ட பிச்சை என்று பேசினார். மேலும் ஊடகங்களையும் கடுமையாக விமர்சித்துபேசினார். நீதிபதிகள் பதவிகள் குறித்து ஆர்.எஸ். பாரதி பேசியது சர்ச்சையானது. தலித்துகளை அவமானப்படுத்தும் வகையில் பேசிய ஆர்.எஸ். பாரதி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆதித்தமிழர் பேரவை சார்பில் புகார் அளிக்கப்பட்டது.


இந்தப் புகாரின் மீது சுமார் 100 நாட்கள் கழித்து  தமிழக போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். ஆர்.எஸ். பாரதி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கடந்த 23ம் தேதி போலீஸார் கைது செய்தனர். சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜப்படுத்தப்படுத்த ஆர்.எஸ். பாரதி இடைக்கால ஜாமின் பெற்று 4 மணி நேரத்தில் வெளியே வந்தர்.  இந்நிலையில் ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.


அந்த மனு மீதான நீதிபதி நிர்மல் குமார் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவுக்குப் பதில் அளிக்க ஆர்.எஸ்.பாரதி தரப்பில் காலஅவகாசம் கோரப்பட்டது. இதனையத்த்டு விசாரணையை மே 29-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி நிர்மல்குமார் உத்தரவிட்டார்.