Asianet News TamilAsianet News Tamil

‘எதிரி ஒரு அடி எடுத்து வச்சா, நாம இரண்டு அடி எடுத்து வைக்கணும்’ - பஞ்ச் வசனம் பேசிய ‘அமைச்சர் செந்தில் பாலாஜி'

 

‘நாம  தான் ஆளுங்கட்சி.நம்முடைய முதல்வர் ஸ்டாலின். நம்மை கண்டுதான் எதிரிகள் பயப்படனும்.அவர்கள் ஒரு அடி எடுத்து வைத்தால், நாம்  இரண்டு அடி எடுத்து வைக்கனும்’ என்று பஞ்ச் வசனம் அடித்துள்ளார் அமைச்சர் செந்தில்பாலாஜி.

 

Tn minister senthil balaji speech at coimbatore dmk party meeting
Author
Coimbatore, First Published Nov 16, 2021, 6:45 PM IST

 

இன்று கோயம்புத்தூரில்  உள்ளாட்சி தேர்தலுக்கு திமுகவினரிடம்  விருப்பமனு வாங்கும் நிகழ்வு மற்றும் செயற்குழு கூட்டம்  நடைபெற்றது. இதில் தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். அப்போது பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ‘தலைமை அறிவிக்கும் வேட்பாளர்களை  தவிர மற்ற அனைவரும்  தேர்தல் பணியாற்றிட வேண்டும். திமுகவை வெற்றி பெற வைப்பதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும்.

Tn minister senthil balaji speech at coimbatore dmk party meeting

தலைமை அறிவிக்கும் வேட்பாளர்களுக்கு எதிர் வரிசையில் நின்று பிரச்சினை ஏற்படுத்தினால் முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நம்மை பார்த்து எதிரிகள் பயப்பட வேண்டும்.எதிரிகள் என்ன செய்கின்றனர் என்பதை பார்த்து முனுமுனுப்பது சரியாக இருக்காது.கோயம்புத்தூர்  மாவட்டத்தில் உள்ள  மாநகராட்சி ,நகராட்சி, பேரூராட்சிகளின்  275 வார்டுகளிலும் திமுக மாபெரும் வெற்றி பெற வேண்டும்.

Tn minister senthil balaji speech at coimbatore dmk party meeting

வரும்  22ம் தேதி தமிழக  முதல்வர் மு.க ஸ்டாலின் கோயம்புத்தூரில் நல திட்ட நிகழ்வுகளில் பங்கேற்க வருகிறார். ஒரு லட்சம் பேர் திரண்டு முதல்வரை வரவேற்க வேண்டும். இன்று முதல் கோவை மாவட்ட திமுக-வில் ஒரே அணி தான்,அது முதலமைச்சர் அணி. நாம  தான் ஆளுங்கட்சி.நம்முடைய முதல்வர் ஸ்டாலின். நம்மை கண்டுதான் எதிரிகள் பயப்படனும்.அவர்கள் ஒரு அடி எடுத்து வைத்தால், நாம்  இரண்டு அடி எடுத்து வைக்கனும்’ என்று பஞ்ச் வசனம் பேசி திமுக தொண்டர்களை அசர வைத்தார்  அமைச்சர் செந்தில்பாலாஜி.


 

Follow Us:
Download App:
  • android
  • ios