தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியான முறையில் நடந்து கொண்டிருக்கிறது. அனைவரும் தவறாமல் ஜனநாயக கடமையாற்ற வேண்டும், ஜனநாயக முறைப்படி என்னுடைய வாக்கை பதிவு செய்துள்ளேன், 

நகைக் கடனை பொறுத்தவரை கடந்த அதிமுக அரசு அயோக்கியத்தனம் செய்துள்ளது என்றும் அதை விசாரிப்பதற்காகத்தான் காலதாம ம் ஆகிறது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ராணுவம் வருமளவிற்கு கோவையில் எந்த ஒரு சம்பவமும் நடைபெறவில்லை தோல்வி பயம் காரணமாக கோவையில் நேற்று அதிமுகவினர் போராட்டம் நடத்தியுள்ளனர் என ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த பின்னர் அவர் இவ்வாறு கூறினார். 

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி மன்ற தேர்தல் காலை முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி,, பேரூராட்சி களுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சி களுக்கும் இந்த தேர்தல் நடைபெறுகிறது. 

மொத்தம் இரண்டரை கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். 1.13 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 1,800 இடங்கள் பதட்டமானவை என போலீசார் கண்டறிந்துள்ளன. பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம் என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பிரபலங்கள் மற்றும் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது பகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்களித்து வருகின்றனர். அந்தவகையில் சென்னை தேனாம்பேட்டை எஸ்எஇடி கல்லூரியில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்கை சந்தித்த அவர், 

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியான முறையில் நடந்து கொண்டிருக்கிறது. அனைவரும் தவறாமல் ஜனநாயக கடமையாற்ற வேண்டும், ஜனநாயக முறைப்படி என்னுடைய வாக்கை பதிவு செய்துள்ளேன், தேர்தல் அமைதியாக நடந்து கொண்டிருக்கிறது, ராணுவம் வருமளவிற்கு கோவையில் எந்த ஒரு சம்பவமும் நடைபெறவில்லை, தோல்வி பயம் காரணமாக கோவையில் நேற்று அதிமுகவினர் போராட்டம் நடத்தியுள்ளனர், சட்டப் பேரவைத் தேர்தலை விட நகர்ப்புற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும், சட்டமன்ற தேர்தலை விட நகர்ப்புற தேர்தலில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர் என்றார். 

நகைக் கடன் விவகாரத்தில் நீங்கள் எதுவுமே செய்யவில்லை என்று அதிமுக குற்றஞ்சாட்டுகிறயே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், நகைக்கடன் விவகாரத்தைப் பொறுத்தவரையில் கடந்த அதிமுக அயோக்கியத்தனம் செய்திருக்கிறது. நகை இல்லாத பொருட்களுக்கு கூட கடன் கொடுக்கப்பட்டுள்ளது. காகிதத்தில் மடிக்கப்பட்ட பொட்டலங்களுக்கு கூட நகை கடன் வழங்கப்பட்டுள்ளது. பலருக்கு வரம்புக்குமீறி நகை கடன் வழங்கப்பட்டுள்ளது, இதுபோன்ற பல குளறுபடிகளை, அயோக்கியத்தனத்தை அதிமுக செய்துள்ளது. இவற்றையெல்லாம் விசாரிப்பதற்கு தான் காலதாமதம் ஆகிறது. இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.