Asianet News TamilAsianet News Tamil

கொரோனா நிவாரண தொகை விநியோகம்... அனைத்து ரேஷன் கடைகளுக்கும் தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

இதனிடையே சற்று நேரத்திற்கு முன்பு அனைத்து ரேஷன் கடைகளுக்கும் தமிழக அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

TN Government official announcement for corona relief fund distribution at ration shop
Author
Chennai, First Published Jun 23, 2021, 4:57 PM IST

கொரோனா ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்கும் விதமாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.4 ஆயிரம் கொரோனா நிவாரணமாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதன் மூலம் 2 கோடியே 10 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. 

TN Government official announcement for corona relief fund distribution at ration shop

கடந்த மாதம் முதற்கட்டமாக ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.  தொடர்ந்து 2ம் தவணையாக ரூ2 ஆயிரம், கொரோனா சிறப்பு நிவாரணமாக 14 வகை மளிகை பொருட்களின் தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.  இதற்கான டோக்கன் கடந்த 11ம் தேதி முதல் வீடு, வீடாக வழங்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 15ம் தேதி முதல் இலவச மளிகை பொருட்கள் மற்றும் ரூ2 ஆயிரம் வழங்கும் பணி ரேஷன் கடைகளில் தொடங்கியது. 

TN Government official announcement for corona relief fund distribution at ration shop

ஒரு நாளைக்கு 200 பேர் வீதம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று வரை மொத்தம் 47.16 சதவீதம் பேருக்கு இலவச மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளது. இதனிடையே சற்று நேரத்திற்கு முன்பு அனைத்து ரேஷன் கடைகளுக்கும் தமிழக அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண 2ஆம் தவணை ரூ.2,000 மற்றும் 14 மளிகைப் பொருட்களை வரும் 25க்குள் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios