பெட்ரோல் டீசல் விலை குறைப்பு விவகாரத்தில் நிதியமைச்சர், உண்மைக்கு புறம்பான பல்வேறு விஷயங்களை பேசி உள்ளதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். 

பெட்ரோல் டீசல் விலை குறைப்பு விவகாரத்தில் நிதியமைச்சர், உண்மைக்கு புறம்பான பல்வேறு விஷயங்களை பேசி உள்ளதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். முன்னதாக கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில் அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பெட்ரோல், டீசல் விலை குறித்தும் குறிப்பிட்டார். மத்திய அரசு, கடந்த ஆண்டு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியைக் குறைத்தது. மாநிலங்கள் வாட் வரியை குறைக்கக் கோரிக்க வைத்தோம். எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் சில மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியைக் குறைக்கவில்லை. அதனால் மக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே, உடனடியாக வாட் வரியைக் குறைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார். இதுக்குறித்து தமிழக சட்டப்பேரவையில் பேசிய தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், எந்த மாநிலமும் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்கவில்லை என சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல், டீசல் மீதான வரி 200 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரதமர் கூறுவதற்கு முன்பே தமிழகத்தில் எரிபொருளின் விலையை முதலமைச்சர் குறைத்துவிட்டார். மத்திய அரசுதான் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக செயல்படுகிறது. திமுக ஆட்சிக்கு வந்த போதெல்லாம் வாட் வரி குறைக்கப்பட்டது என்பது தான் வரலாறு எனத் தெரிவித்தார். இந்த நிலையில் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு விவகாரத்தில் நிதியமைச்சர், உண்மைக்கு புறம்பான பல்வேறு விஷயங்களை பேசி உள்ளதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்தியர அரசு கலால் வரியை உயர்த்தி உள்ளதாக சொல்கிறார்கள். மாநிலத்தில் பண வீக்கம் நிலையை கணக்கிட வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை இந்தியா உறபத்தி செய்யவில்லை. பெட்ரோல், டீசலை இறக்குமதி செய்யும் பட்டியலில் தான் இந்தியா இருக்கிறது. கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு பெட்ரோல் டீசல் வாட் வரியை குறைத்ததால் ஒரு லட்சம் கோடி இழப்பிடு ஏற்படும் என அறிக்கை சொல்கிறது. கடந்த நவம்பர் மாதம் முதல் 2,800 கோடி ரூபாய் வாட் வரியாக தமிழக அரசு பெற்றுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வரும் வருவாயை மத்திய அரசு வீட்டிற்கு கொண்டு செல்லவில்லை. தடுப்பூசி உட்பட பல்வேறு நலத்திட்டங்களுக்கு பயன்படுத்துகிறது. பெட்ரோல் டீசல் விலை குறைப்பு விவகாரத்தில் நிதியமைச்சர், உண்மைக்கு புறம்பான பல்வேறு விஷயங்களை பேசியுள்ளார் என்று தெரிவித்தார்.