விக்கிரவாண்டி தொகுதியில் திமுக தனது வேட்பாளரை அறிவித்துவிட்டது. இதேபோல அதிமுகவும் இரு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களின் பெயரை அறிவித்துவிட்டது. ஆனால், காங்கிரஸ் கட்சி இன்னும் தங்கள் கட்சி வேட்பாளரின் பெயரை அறிவிக்கவில்லை.
நாங்குநேரியில் ஒத்த வேட்பாளரின் பெயரை அறிவிப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். 
நாங்குனேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21 அன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடுகிறது. நாங்குநேரி தொகுதியைக் கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு திமுக விட்டுக்கொடுத்துவிட்டது. விக்கிரவாண்டி தொகுதியில் திமுக தனது வேட்பாளரை அறிவித்துவிட்டது. இதேபோல அதிமுகவும் இரு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களின் பெயரை அறிவித்துவிட்டது. ஆனால், காங்கிரஸ் கட்சி இன்னும் தங்கள் கட்சி வேட்பாளரின் பெயரை அறிவிக்கவில்லை.
ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு உதவும் வகையில் அதன் கூட்டணி கட்சியான திமுக, நாங்குநேரியில் ஐ.பெரியசாமி தலைமையில் கனிமொழி உட்பட தேர்தல் பணிக்குழுவை அறிவித்துள்ளது. இன்று முதல் இந்தக் குழு தேர்தல் பணியில் ஈடுபட உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. நாங்குநேரியில் போட்டியிட குமரி அனந்தன் உள்பட 10-க்கும் மேற்பட்ட காங்கிரஸார் முயற்சி செய்துவருகிறார்கள்.

