ப.சிதம்பரத்துக்கே இந்த நிலைமையா..? கெத்தாக முடிவெடுத்து கதறவிட்ட ராகுல் காந்தி..!
கார்த்தி சிதம்பரத்திற்கு வாய்ப்பு இல்லை என்றால் தனக்கு அந்த தொகுதியை வழங்க வேண்டும், மூத்த நிர்வாகிகள் நானும் ஒருவன் என சுதர்சன நாச்சியப்பன் கேட்டு வருகிறார்.
சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரத்திற்கு காங்கிரஸ் தலைமை சீட் கொடுக்க மறுப்பதால் தனது ஆதரவாளர் ஒருவருக்கு தொகுதியை தர வேண்டும் என சிதம்பரம் தரப்பு கோரிக்கை வைத்து வருகிறது. இதனால், சிவகங்கை தொகுதி வேட்பாளரை இறுதி செய்வதில் இழுபறி நீடிக்கிறது.
சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் 8 தொகுதிகளுக்கு மட்டுமே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அனைத்து கட்சிகளும் வேட்பாளரை அறிவித்து விட்ட நிலையில் சிவகங்கை தொகுதிக்கு மட்டும் அறிவிக்கப்படவில்லை.
சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் நிற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர் மீது இருக்கும் வழக்கு காரணமாக அவர் நிற்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து அவரது மனைவி ஸ்ரீநிதிக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனக் கூறப்பட்டது. காங்கிரஸ் மேலிடம் சிதம்பரம் குடும்பத்தில் யாருக்கும் சீட் கொடுக்கக்கூடாது என முடிவெடுத்து விட்டதாக கூறப்படுகிறது. தங்கள் குடும்பத்திற்கு சீட் ஒதுக்கப்படாத நிலையில் சிவகங்கை தொகுதியில் எனது ஆதரவாளருக்கு ஒதுக்க வேண்டும் என சிதம்பரம் தரப்பு உறுதியாக இருந்து வருகிறது.
சிதம்பரம் தரப்பில் முன்னாள் எம்.எல்.ஏ. காரைக்குடி சுந்தரம் அல்லது வேலுச்சாமி ஆகிய இருவரில் ஒருவரை அறிவிக்கவேண்டும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால், முன்னாள் எம்.பி சுதர்சன நாச்சியப்பன் நீண்டகாலமாக சிவகங்கையில் பிரபலமான காங்கிரஸ் தலைவராக இருந்து வருகிறார். 1999 ல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் சிவகங்கை தொகுதியிலிருந்து காங்கிரஸ் கட்சி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மத்திய வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார். கார்த்தி சிதம்பரத்திற்கு வாய்ப்பு இல்லை என்றால் தனக்கு அந்த தொகுதியை வழங்க வேண்டும், மூத்த நிர்வாகிகள் நானும் ஒருவன் என சுதர்சன நாச்சியப்பன் கேட்டு வருகிறார்.
சிவகங்கையில் சுதர்சன நாச்சியப்பன் நிறுத்தப்பட்டால் அவர் சிறந்த வேட்பாளராக இருப்பார், அவர் வெல்வதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் உண்டு என காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் குழப்பத்தில் இருக்கும் காங்கிரஸ் தலைமை சிவகங்கை தொகுதியை மட்டும் தற்போது அறிவிக்காமல் நிறுத்தி வைத்துள்ளது.