அதிமுக ஆட்சியில் பெண்களுக்காக கொண்டுவந்த தாலிக்கு தங்கம், பெண்களுக்கு இரு சக்கர வாகனம் ஆகியவற்றையும் ரத்து செய்து விட்டது.
சொத்து வரி உயர்வு - ஆர்ப்பாட்டம் :
தமிழகத்தில் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சொத்துவரி உயர்ந்துள்ளது. இதற்கு எதிர்கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசின் சொத்துவரி உயர்வை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் 500க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ‘எத்தனையோ பொய்களை சொல்லி ஆட்சிக்கு திமுக வந்தது என்றும் அவர்கள் அளித்த வாக்குறுதிகளை எல்லாம் கிடப்பில் போட்டுவிட்டது. 100 ரூபாய் கொலுசை கொடுத்து விட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆயிரக்கணக்கில் வரியை உயர்த்தி விட்டது. மக்கள் அந்த வரியை கட்டும் போதுதான் அதன் விபரீதம் புரியும்.
முதல்வர் ஸ்டாலின் முதலிடம் :
மத்திய அரசு எது கூறினாலும் அதனை நிறைவேற்ற மாட்டோம் என கூறி வரும் திமுக அரசு இதை மட்டும் மத்திய அரசு கூறியதால் செய்தோம் என்று எவ்வாறு கூறுகிறார்கள். அதிமுக ஆட்சியிலும் மத்திய அரசு சொத்து வரியை உயர்த்த ஆலோசனை மேற்கொண்டது என கூறிய அவர் ஆனால் அப்போதைய முதல்வர் (எடப்பாடி பழனிச்சாமி) ஒரு சதவீதம் கூட சொத்து வரியை உயர்த்த கூடாது என கூறி மக்களுக்கு நன்மை செய்தார்.
அதுமட்டுமின்றி அதிமுக ஆட்சியில் பெண்களுக்காக கொண்டுவந்த தாலிக்கு தங்கம், பெண்களுக்கு இரு சக்கர வாகனம் ஆகியவற்றையும் ரத்து செய்து விட்டது. கோவையில் 50 ஆண்டு காலங்களில் இல்லாத வளர்ச்சியை 5 ஆண்டுகளில் கொண்டு வந்தோம். அதிமுக ஆட்சியில் பெரும்பாலும் முடிக்கப்பட்ட மேம்பாலம், கூட்டு குடிநீர், புறவழி சாலை பணிகளை தற்போதைய அரசு மெதுவாக்கி விட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

வெள்ளலூர் பேரூராட்சியில் நடைபெற்ற தலைவர் தேர்தலிலும் திமுக அரசுக்கு ஆதரவாக அலுவலர்கள் செயல்பட்டதாகவும் தெரிவித்தார். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முதன்முதலில் புகார் கொடுத்தது பொள்ளாச்சி ஜெயராமன் தான் என்றும் ஆனால் அதனை அப்படியே மாற்றி விட்டுவிட்டனர். அப்போது திமுக கம்யூனிஸ்ட் உட்பட பலரும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டார்கள். ஆனால் தற்போது நடைபெற்ற விருதுநகரில் நடைபெற்ற சம்பவத்திற்கு யாரும் குரல் கொடுக்கவில்லை. பொய் வழக்கு போடுவதில் திமுக அரசு நம்பர் ஒன். அவர்களுக்கு டாக்டரேட் வழங்கலாம்’ என்று கூறினார்.
