சென்னையில் வெள்ள பாதிப்புகளை தடுக்க ரூ.100 கோடி செலவில் அடையாறு - கூவம் பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என்று முதலமைச்சர்
எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110-ன் கீழ் ஆற்றிய உரையில் இந்த அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், சென்னை மெரினா கடற்கரையில்
அமைந்துள்ள அண்ணா நினைவகம் ரூ.4 கோடியில் சீரமைக்கப்படும் என்றார்.

சென்னையில் வெள்ள பாதிப்புகளைத் தடுக்க அடையாறு - கூவம் பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என்றார். இதற்காக ரூ.100 கோடி நிதி
ஒதுக்கப்பட்டதாக கூறினார். பருவமழை தொடங்க உள்ள நிலையில், சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளத் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பணிகள் நடைபெறும் என்றார்.

முன்னாள் முதலமைச்சர் அண்ணா நினைவகம் ரூ.4 கோடியில் சீரமைக்கப்படும். முன்னாள் முதலமைச்சர் ராமசாமி படையாட்சியார், நடிகர் சிவாஜி கணேசன்
பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றார். செப்டம்பர் 16 ஆம் தேதி ராமசாமி படையாட்சியார் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்
என்றார்.