பல்லைக்கழகங்களில் மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். துணைவேந்தா் நியமனத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டிய ஆளுநா் நடவடிக்கை எடுக்காமல் பொது மேடையில் குறை கூறி வருகிறார். துணைவேந்தா் நியமனத்தில் பலகோடி ரூபாய் அளவில் பணம் கைமாற்றப்பட்டுள்ளதாக தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோகித் குற்றம்சாட்டியிருந்தார்.

 

இந்நிலையில் இதுதொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவா் கூறுகையில் பல்கலைக்கழக துணைவேந்தா் நியமனத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டிய வேந்தரும், ஆளுநருமான பன்வாரிலால் புரோகித் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு ஊழல் குறித்து பேசுவது வேதனை அளிக்கிறது. ஏற்கனவே ஊழல் முறைகேடு குறித்து ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது.

 

மேலும் இடைத்தேர்தலை சந்திக்க தமிழக அஞ்சுகிறது. தமிழக தலைமைச் செயலாளா் கிரிஜா வைத்தியநாதன் அ.தி.மு.க.வின் கொள்கைப் பரப்பு செயலாளராக மாறி தோ்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார் என்று ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.