ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்த பிறகு 20 ஆயிரம் கோடி ரூபாய் தமிழகத்திற்கு வரி இழப்பு ஏற்படும் என்றார். அதேபோல் பல்வேறு துறைகளுக்கு நிதிகளை ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்ட அவர், உக்ரைனில் இருந்து நாடு திரும்பியுள்ள தமிழக மாணவர்கள் தமிழ்நாட்டிலோ அல்லது அயல்நாட்டிலோ படிப்பை தொடர தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என உறுதியளித்தார்.
நிதிநிலை அறிக்கை ஒரு வெத்துவேட்டு அறிக்கை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார். தமிழக பட்ஜெட் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்துள்ள நிலையில் அவர் இவ்வாறு விமர்சித்துள்ளார்.
முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்று முதல் முழு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசின் 2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். திட்டமிட்டபடி காலை 10 மணிக்கு பட்ஜெட் கூட்டம் தொடங்கியது. கூட்டம் தொடங்கியவுடன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தங்களுக்கு பேச வாய்ப்பளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். பட்ஜெட்டை தாக்கல் செய்து முடித்த பிறகே பேச வாய்ப்பு வழங்கப்படும் என சபாநாயகர் கூறினார். ஆனால் அதை ஏற்க மறுத்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் சிறிது நேரம் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

பட்ஜெட் கூட்டம்:
அப்போது பட்ஜெட் உரையை சிறிது நேரம் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நிறுத்தி வைத்தார்.எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பிற்குப் பிறகு பிடிஆர் தொடர்ந்து பட்ஜெட் வாசித்தார். அதில் பல்வேறு திட்டங்களுக்கு அவர் நிதி ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டார். ரஷ்யா உக்ரைன் போர் மாநில பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அவர் அதன் அடிப்படையிலேயே பட்ஜெட்டில் உருவாகியிருப்பதாக கூறினார். பெண்கள் இளைஞர்கள் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது என்றார். வருவாய்ப் பற்றாக்குறை கடந்த ஓராண்டில் 7 ஆயிரம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளது என்றார். ஒரு நிதியாண்டில் மாநில மொத்த உற்பத்தியில் நிதிப்பற்றாக்குறை 4.61 சதவீதத்திலிருந்து 3. 80 சதவீதமாக குறையும் என்று கூறினார்.
இதையும் படியுங்கள்: TN Budget : பொருளாதாரத்தில் உக்ரைன் போர் தாக்கதை ஏற்படுத்தும்.. பட்ஜெட் உரையில் பிடிஆர் பகீர்.
கடன் குறையவில்லை- இபிஎஸ் குற்றச்சாட்டு
ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்த பிறகு 20 ஆயிரம் கோடி ரூபாய் தமிழகத்திற்கு வரி இழப்பு ஏற்படும் என்றார். அதேபோல் பல்வேறு துறைகளுக்கு நிதிகளை ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்ட அவர், உக்ரைனில் இருந்து நாடு திரும்பியுள்ள தமிழக மாணவர்கள் தமிழ்நாட்டிலோ அல்லது அயல்நாட்டிலோ படிப்பை தொடர தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என உறுதியளித்தார்.அப்போது சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர் சந்தித்தார். அப்போது பேசிய அவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் இருந்தது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக்கு பிறகு அதாவது நாங்கள் ஆட்சி விட்டு செல்லும் போது வெறும் 4.8 லட்சம் கோடி கடன் மட்டுமே இருந்தது.

இதையும் படியுங்கள்: சட்டமன்ற கூட்டம் தொடங்கிய உடனேயே அதகளம் செய்த அதிமுக.. பட்ஜெட் வாசிப்பை நிறுத்தினார் பிடிஆர்..
வெத்துவேட்டு நிதி நிலை அறிக்கை-இபிஎஸ்:
திமுக ஆட்சியில் வருவாய் அதிகரித்து இருக்கிறது. ஆனால் கடன் குறையவில்லை, கடனும் அதிகரித்திருக்கிறது, இதன்மூலம் இவர்கள் சரியாக செயல்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. திமுக ஆட்சி அமைத்த பிறகு கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது ஆனால் இன்று வெளியிட்ட அறிக்கையில் அது குறித்த அறிவிப்பு இடம்பெறவில்லை. பெட்ரோல்-டீசல் விலை குறைக்கப்படும் என அறிக்கையில் குறிப்பிட்டவாறு நிதிநிலை அறிக்கையில் பெட்ரோல் டீசல் விலை குறைப்பது குறித்து அறிவிப்பு இல்லை. இதுவரை பெட்ரோலுக்கு 3 ரூபாய் மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில் இந்த நிதிநிலை அறிக்கை ஒரு வெத்துவேட்டு அறிக்கை இவ்வாறு அவர் விமர்சித்தார்.
