Asianet News TamilAsianet News Tamil

உங்களுக்கு தைரியம் இருக்கா.? திருமாவளவன் & வேல்முருகனுக்கு சவால் விட்ட பாஜக வேலூர் இப்ராஹிம்.!

வேல்முருகன், திருமாவளவனுக்கு தைரியம் இருந்தால் எங்களை தடுத்து பார்க்கட்டும் என்று சவால் விட்டுள்ளார் பாஜகவை சேர்ந்த வேலூர் இப்ராஹிம்.

TN BJP Vellore Ibrahim has challenge to Velmurugan and VCK Thirumavalavan
Author
First Published Dec 5, 2022, 5:14 PM IST

கோவை காந்திபுரம் பகுதியிலுள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தில் அக்கட்சியின் சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், ‘எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் இஸ்லாமிய கிறிஸ்துவ மக்களின் நம்பிக்கைகளை பெற்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சிறுபான்மை சமூகத்திற்காக தந்த நலத்திட்டங்களை அந்த மக்களுக்கு பயனாளிகளாக உருவாக்கி அதன் மூலம் உண்மையான சிறுபான்மை மக்களின் பாதுகாவலனாக பாரதிய ஜனதா கட்சி தான் திகழ்கிறது.

TN BJP Vellore Ibrahim has challenge to Velmurugan and VCK Thirumavalavan

அந்த நம்பிக்கையை விதைத்து எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் இரட்டை இலக்கத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களை அனுப்ப வேண்டும். அதில் குறிப்பாக கோவை மாவட்டத்திலிருந்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக வேட்பாளராக நின்று வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற அடிப்படையில் அதற்கான திட்டங்களை மற்றும்  முன்னேற்பாடுகளை எப்படி செய்ய வேண்டும் என்ற பல்வேறு விஷயங்களை  ஆலோசித்து வருகிறோம்.

இதையும் படிங்க.. பாம்பின் வாலை இழுத்த இளைஞரை ‘அந்த’ இடத்தில் கடித்த துணிவான பாம்பு - வைரல் வீடியோ !

பாஜகவை பொறுத்தவரை மிக வேகமாக சிறப்பாக இருக்கிறது என்பதை கட்சியில் உள்ள நாங்கள் சொல்வதை விட, திமுக பொதுச்செயலாளர்  துரைமுருகன் அவர்களே சொல்கிறார் என்றால் அந்த அளவிற்கு இன்றைக்கு மக்களின் மனங்களில் தாமரை பதிந்திருக்கிறது. எங்களுடைய மாநில தலைவர் அண்ணாமலை மிகச் சிறப்பான செயல்பாட்டின் மூலம் குறிப்பாக சிறுபான்மை மக்களுக்கு மத்தியில் அவர் பல்வேறு உணர்ச்சி பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

சிறுபான்மை மக்களுக்கான நலத்திட்டங்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்று எங்களை தொடர்ந்து உந்து  சக்தியாக செயல்படுத்தக்கூடிய விதமும் சிறுபான்மை மக்களிடத்தில் மிகப்பெரிய நற்பெயரை  பாரதிய ஜனதா கட்சிக்கு வாங்கி தந்திருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் காலம் காலமாக செய்யக்கூடிய வாக்கு வங்கி அரசியல் இனிமேல் தமிழகத்தில் ஈடுபடாது. நாளைய தினம் பாபர் மசூதி இடிப்பு இனத்தை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாத கட்சியான தவ்ஹீத் ஜமாத் போன்ற கட்சிகள் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தை முற்றிகையிடப் போவதாக அறிவித்துள்ளனர்.

பாஜக சிறுபான்மை பிரிவு சார்பில் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் இணைந்து ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திற்கு  பாதுகாப்பு கொடுப்போம். வேல்முருகன், திருமாவளவனுக்கு தைரியம் இருந்தால் எங்களை தடுத்து பார்க்கட்டும. முற்றுகையிடும் உங்களை சிதறடிப்போம். ஜனநாயக ரீதியில் நாங்களும் அத்துமீறுவோம். தமிழக காவல்துறை திமுக ஆட்சியில் திறனற்று உள்ளது. மக்களின் உரிமைகளுக்காக போராடினால் திமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கிறார்கள்.

இதையும் படிங்க.. கைகளில் நடுக்கம்.. படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த ரஷ்ய அதிபர் புடின்.. கவலைக்கிடமா.? அதிர்ச்சி தகவல் !

TN BJP Vellore Ibrahim has challenge to Velmurugan and VCK Thirumavalavan

திருமாவளவன் பட்டியலின மக்களின் துரோகி. தீவிரவாதிகளின் புகழிடமாக இருக்கும் இடங்களை நாங்கள் மாற்றுவோம். இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் இடங்களில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரசாரம் செய்கிறார்கள். கோவையில் அடுத்த ஆறு மாதத்திற்குள் மீண்டும் குண்டு வெடிக்க வாய்ப்புள்ளது. அந்த அளவிற்கு அந்த பகுதிகளில் இளைஞர்கள் உருவாகி வருகிறார்கள். ஜனநாயக ரீதியில் இஸ்லாமிய மக்களை அணுக காவல்துறை அனுமதிக்க வேண்டும்.

வாக்கு வங்கிக்காக கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகள் இஸ்லாமியர்களை பயன்படுத்துகின்றன. காவல்துறையை கையில் வைத்துள்ள ஸ்டாலின் அதனை ஏவல் துறையாக பயன்படுத்துகின்றார். கோவையில் கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்த சங்கமேஸ்வரர் திருக்கோவில் நிர்வாகத்துடன் பேசி பாஜக சிறுபான்மை பிரிவு நிர்வாகிகள் அங்கு செல்ல முற்பட்டபோது காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். மதநல்லிணக்கம் வேண்டாம் என்று  தடுக்கின்றனர். ஆனால் ஜாமாத்தார்கள் என்ற பெயரில் சிலரை அங்கு அனுமதிக்கின்றனர்.

மொத்தத்தில் பாஜக அங்கு செல்லக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர். கர்நாடகாவில் குக்கர் குண்டு வெடிப்பு குறித்து பாஜக விமர்சனம் செய்யவில்லை என கூறுகின்றனர். அதே வேளையில் அங்கு நடைபெற்ற சம்பவத்தை அம்மாநில அரசும் காவல்துறையும் நடந்தது குண்டு வெடிப்பு என உறுதிபட கூறியது. ஆனால் கோவையில் நடைபெற்ற கார் குனு வெடிப்பு சம்பவத்தை அமைச்சர் செந்தில் பாலாஜியும் தமிழக அரசும் சிலிண்டர் வெடிப்பு என்றே கூறுகிறது என்று குற்றஞ்சாட்டினார்.

இதையும் படிங்க.. தளபதி 67 படத்துக்காக முதன்முறையாக ரஜினியின் சென்டிமென்டை பாலோ பண்ணிய விஜய்

Follow Us:
Download App:
  • android
  • ios