Asianet News TamilAsianet News Tamil

அண்ணாமலை போட்ட அதிரடி உத்தரவு.. எள்ளுன்னா எண்ணையா மாறிய எச்.ராஜா.. 12 கோயில்கள் முன்பாக நடக்கபோகும் அதிரடி.

கோவில்களுக்கு பக்தர்களால் வழங்கப்பட்ட விலைமதிப்புள்ள பழமையும், பாரம்பரியமும் மிக்க புனிதமான ஆபரணங்களை உருக்கி, அதை தங்க கட்டியாக்கி அதிலும் பணம் சம்பாதிக்க திமுக நினைக்கிறது  என  திமுக அரசை விமர்சித்துள்ள பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, அக்டோபர் 7ஆம் தேதி காலை 11 மணிக்கு முக்கிய கோவில்கள் முன்பு பாரதிய ஜனதாக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார். எச்.ராஜா அந்த ஆர்பாட்டத்தை ஒருங்கிணைப்பாளர் என்றும் அவர் அறிவித்துள்ளார். 

Tn BJP President annamalai order to h raja..  Demonstration in front of 12 temples and action.
Author
Chennai, First Published Oct 3, 2021, 3:21 PM IST

கோவில்களுக்கு பக்தர்களால் வழங்கப்பட்ட விலைமதிப்புள்ள பழமையும், பாரம்பரியமும் மிக்க புனிதமான ஆபரணங்களை உருக்கி, அதை தங்க கட்டியாக்கி அதிலும் பணம் சம்பாதிக்க திமுக நினைக்கிறது  என  திமுக அரசை விமர்சித்துள்ள பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, அக்டோபர் 7ஆம் தேதி காலை 11 மணிக்கு முக்கிய கோவில்கள் முன்பு பாரதிய ஜனதாக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார். எச்.ராஜா அந்த ஆர்பாட்டத்தை ஒருங்கிணைப்பாளர் என்றும் அவர் அறிவித்துள்ளார். இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம் பின்வருமாறு:-

திராவிட முன்னேற்ற கழகத்தின் அரசு, புனித நாளாக கருதப்படும் வெள்ளி மற்றும் விடுமுறை நாளான சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் திருக்கோயில்களை மூடுகிறது. அதை மாற்றி வாரத்தின் எல்லா நாட்களிலும் திருக்கோயில்களை திறக்க வேண்டும் என்ற மக்களின் வேண்டுகோள், செவிடன் காதில் ஊதிய சங்காக ஆகிப்போனது, கோவில்களுக்கு சென்று கடவுளை வழிபடுவது தமிழர்கள் வாழ்வியலின் ஒரு பகுதி ஆகும், அதை தடுக்க நினைப்பது தீய எண்ணத்தில் சதியாக இருக்குமோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது. நம் நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஏறத்தாழ 69 சதவீதம் பேர், ஏறத்தாழ 89 கோடி பேர் ஒருமுறையாவது தடுப்பூசியை பெற்றிருக்கிறார்கள். மத்திய அரசின் பெருமுயற்சியால் இலவச தடுப்பூசியால் நம் நாடு தற்போது பாதுகாப்பாக இருக்கிறது. பள்ளிகள், காவல் துறைகள், அலுவலகங்கள், உணவகங்கள், சாலைப்போக்குவரத்து என்று எல்லாம்  சரளமாக நடைபெறும்போது, தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களை மட்டும் வாரநாட்களில் மூடுவது வஞ்சக எண்ணமாகத்தான் இருக்குமே தவிர அதற்கு வேறு காரணங்கள் இருக்க முடியாது.

Tn BJP President annamalai order to h raja..  Demonstration in front of 12 temples and action.

திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டத்தை மூன்று நாட்கள் தடுத்து நான்காவது நாள் திங்கள்கிழமை அதிக கூட்டத்தை வேகமாக அனுமதிப்பதன் மூலம் நோய் பரவுவதை தடுக்கும் என்று திமுக அரசு கூறுவதை யாரும் ஏற்க முடியாது, இதில் கொஞ்சமும் உண்மையில்லை, திமுகவுக்காக கட்டுக்கதைகளை வடிவமைக்கும் நபர்களை கலந்து ஆலோசித்து புதிதாக வேறு ஒரு நல்ல பொய்யை அவர்கள் கேட்டுப்பெறலாம்,எதிர்க்கட்சியாக இருந்தபோது டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று போராடிய திமுக பிறகு தன் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தி வாரத்தில் அனைத்து நாட்களிலும் டாஸ்மாக்கை திறப்பதற்கு காட்டுப்பாடும் அவசரத்தை கண்டாலே நமக்கெல்லாம் விளங்கிவிடும் திமுக ஆட்சி தற்போது எந்த முதலைகளின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது என்பது. காவல்துறையினர் கடமையாற்ற பல்வேறு கண்ணியமான பணிகள் எதிர்நோக்கி இருக்கும் போது, ஒவ்வொரு டாஸ்மாக் கடையிலும் கால்கடுக்க அவர்கள் காவல் நிற்பதைப் பார்க்கும்போது நாங்கள் வெட்கப்படுகிறோம். 

Tn BJP President annamalai order to h raja..  Demonstration in front of 12 temples and action.

கோவில்களுக்கு பக்தர்களால் வழங்கப்பட்ட விலைமதிப்புள்ள பழமையும், பாரம்பரியமும் மிக்க புனிதமான ஆபரணங்களை உருக்கி தங்க கட்டியாக்கி அதிலும் பணம் சம்பாதிக்க நினைக்கிறது திமுக அரசு. தமிழக அரசின் திருக்கோயிலில் பராமரிப்பு அறநிலையமாக நடக்க வேண்டுமே தவிர அரசாங்கத்தின் வணிக நிறுவனமாக நடக்கக்கூடாது. தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடையின் மூலம் புரிகிறது, கடவுள் இல்லை என்று, கடவுள் மறுப்பு தத்துவத்தின் அடிப்படையில் இயங்குகிற திமுக அரசு, கடவுளை வழிபடுவதற்கு தன்னாலான எல்லாவிதமான இடஞ்சல்களையும் தர தயங்காது. ஆனால் எத்தனை தொல்லைகள் தந்தாலும் கூட, அவனருளாலே, அவன் தாள் வணங்கும் அருளைப் பெற்ற தமிழர்களை கோவிலுக்கு செல்லாமல் தடுக்க முடியாது.கோவிட் தொற்றுநோயை கோவில் திறக்காததற்கு காரணமாகச் சொல்வது நகைப்பிற்குரிய செயல். மாற்று மதங்களில் இறை வழிபாட்டுத் தலங்கள் எந்த இடையூறும் இல்லாமல் எல்லா நாட்களிலும் அரசின் மறைமுக ஆதரவுடன் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது என்பதை நிரூபிக்க பல சான்றுகள் உள்ளன.

Tn BJP President annamalai order to h raja..  Demonstration in front of 12 temples and action.

ஆகவே, திமுக அரசு தன் ஒரு சார்பு அரசியல் நிலைப்பாட்டையே தன் அரசியல் நிலைப்பாடாகவும் தொடர்வது தெளிவாகிறது. திருக்கோயிலை நம்பியிருக்கும் சிறு சிறு வியாபாரிகள் தேங்காய், பூ, பழம் விற்பவர்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. செவிடன் காதில் ஊதிய சங்காக கேளாத மடந்தையாக ஒரு சாராருக்கு உடந்தையாக இருக்கும் அரசினால் இந்த ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அனைத்து நாட்களிலும் ஆலயம் செல்ல அனைவரையும் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, வரும் அக்டோபர் 7ஆம் தேதி காலை 11 மணி அளவில் முக்கிய கோவில்களுக்கு முன்பாக பாரதிய ஜனதாக் கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் செய்ய இருக்கிறார்கள். தமிழ்ச் சமுதாயமே உங்கள் அனைவரையும் உணர்வுபூர்வமாக அழைக்கிறேன், நடுநிலை தவறி மக்களின் நியாயமான கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் ஒருதலைபட்சமாக செயல்படும் மக்கள் உணர்வை மதிக்காத இந்த அரசாங்கத்திற்கு பாடம் புகட்ட அனைவரும் எங்களுடன் இணைந்து செயல்படுங்கள்.

Tn BJP President annamalai order to h raja..  Demonstration in front of 12 temples and action.

அனைத்து நாட்களிலும் கோயில்கள் திறக்கவேண்டும் அதுவும் நவராத்திரி பண்டிகை நெருங்குவதால் உடனே நம்  கோரிக்கைக்கு செவிசாய்க்க விட்டால் இதை மிகப்பெரிய மக்கள் இயக்கமாக மாற்ற பாரதிய ஜனதா கட்சி தயங்காது, அரசின் அடக்குமுறையைக் கண்டு அச்சம் எமக்கு இல்லை, திமுக அரசு மக்கள் மன்றத்தில் பதில் சொல்ல வேண்டிய நிலையை உருவாக்குவோம். இந்த போராட்டத்தை நமது முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா அவர்கள் ஒருங்கிணைக்கிறார், அனைவரும் உங்கள் நல்ல ஆதரவை நல்கி வரும் 7ஆம் தேதி நடைபெறவிருக்கும் இந்த போராட்டத்தில் பெரும் திரளாக கலந்து கொண்டு அரசை திகைக்க வைக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன் அண்ணாமலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள எச்.ராஜா, இந்த ஆர்பாட்டம் 12 இடங்களில் நடைபெற உள்ளது. அதில் ஹிந்து இயக்கங்களை சேர்ந்தவர்கள் ஹிந்து உணர்வாளர்கள் மத வழிபாட்டு உரிமை பறிக்கப்பட்ட அனைத்து ஹிந்துக்களும் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios