Asianet News TamilAsianet News Tamil

திருமாவளவனை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம்... தமிழக பாஜக அதிரடி அறிவிப்பு..!

7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநர் எடுத்து கொண்ட நேரம் போதும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
 

TN BJP Leader L.Murugan request to Governor for 7.5 percent reservation
Author
Chennai, First Published Oct 25, 2020, 9:14 PM IST

நீட் தேர்வால் பாதிக்கப்படும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு மசோதா கொண்டு வந்து நிறைவேற்றியது. அந்த மசோதா தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அந்த மசோதாவுக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்துவருகின்றன. ஆனால், இந்த விவகாரத்தில் முடிவு எடுக்க ஆளுநரோ இன்னும் கால அவகாசம் கேட்டுவருகிறார். இந்த விவகாரத்தில் பாஜக மட்டும் பதில் சொல்லாமல் மவுனம் காத்துவருகிறது. இந்நிலையில் தற்போது பாஜக தலைவர் எல்.முருகன் கருத்து தெரிவித்துள்ளார்.TN BJP Leader L.Murugan request to Governor for 7.5 percent reservation
சென்னையில் செய்தியாளர்களிடம் எல்.முருகன் பேசும்போது, “7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநர் எடுத்து கொண்ட நேரம் போதும். இனியும் தாமதம் செய்யாமல் உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும் என ஆளுநரை கேட்டு கொள்கிறேன். ஆளுநர் தாமதம் செய்தாலும், மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்துவிடும்.” என்று எல்.முருகன் தெரிவித்தார்.

TN BJP Leader L.Murugan request to Governor for 7.5 percent reservation
மேலும் அவர் கூறுகையில், “நவம்பர் 6 முதல் டிசம்பர் 6 வரை தமிழகத்தில் வேல் யாத்திரை நடைபெற உள்ளது. திருமாவளவனை கண்டித்து வரும் செவ்வாய்க்கிழமை பா.ஜ.க மகளிரணி சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது. திருமாவளவனுக்கு எதிராக அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பும் போராட்டம் நடக்கும். தற்போது மனுதர்மம் எங்கு உள்ளது. அது நடைமுறையில் உள்ளதா?” என்று எல்.முருகன் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios