Asianet News TamilAsianet News Tamil

தாழ்த்தப்பட்டவர்களை திமுக எம்.பி.க்கள் விமர்சித்தது மு.க. ஸ்டாலினின் குரல்தான்...பாஜக தலைவர் பகிரங்க புகார்!

 தமிழக தலைமைச் செயலாளர் தங்களை அவமானப்படுத்தியதாக தயாநிதி மாறன் புகார் கூறி பேட்டியளிக்கும்போது, ‘நாங்கள் எல்லாம் தாழ்த்தப்பட்டவர்களா?’ என்று பேசியதும் சர்ச்சையானது. தயாநிதி மாறனுக்கு எதிராக பாஜக எஸ்.சி. அணி சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. திமுக எம்.எல்.ஏ. பி.டி.ஆர். தியாகராஜன், ‘அம்பட்டையன்’ என்று சொன்னதும் சர்ச்சையனது. இதற்காக தியாகராஜன் மன்னிப்பு கோரினார். மேலும் முரசொலி நில விவகாரத்தில் மூலப்பத்திரம் வெளியிட வேண்டும் என்று அவ்வப்போது சமூக ஊடங்களில் பாஜக கேலி, கிண்டல் செய்துவருகிறது. 
 

TN BJP leader L.Murgan slam DMK President M.K.Stalin
Author
Chennai, First Published May 31, 2020, 10:00 PM IST

பட்டியலின மக்களை அவமானப்படுத்திய திமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பேசியதை மு.க. ஸ்டாலின் குரலாகப் பார்ப்பதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.TN BJP leader L.Murgan slam DMK President M.K.Stalin
திமுக இளைஞரணி அலுவலகமான அன்பகத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில் பேசிய திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி, ‘தலித்துகள் நீதிபதிகள் ஆனது திராவிட இயக்கம் போட்ட பிச்சை’ என்று பேசினார். ஆர்.எஸ். பாரதியின் இந்தப் பேச்சு சர்ச்சையானது. தலித்துகளை அவமானப்படுத்தும் வகையில் பேசிய ஆர்.எஸ். பாரதி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆதித்தமிழர் பேரவை சார்பில் புகார் அளிக்கப்பட்டது.TN BJP leader L.Murgan slam DMK President M.K.Stalin
இதேபோல தமிழக தலைமைச் செயலாளர் தங்களை அவமானப்படுத்தியதாக தயாநிதி மாறன் புகார் கூறி பேட்டியளிக்கும்போது, ‘நாங்கள் எல்லாம் தாழ்த்தப்பட்டவர்களா?’ என்று பேசியதும் சர்ச்சையானது. தயாநிதி மாறனுக்கு எதிராக பாஜக எஸ்.சி. அணி சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. திமுக எம்.எல்.ஏ. பி.டி.ஆர். தியாகராஜன், ‘அம்பட்டையன்’ என்று சொன்னதும் சர்ச்சையனது. இதற்காக தியாகராஜன் மன்னிப்பு கோரினார். மேலும் முரசொலி நில விவகாரத்தில் மூலப்பத்திரம் வெளியிட வேண்டும் என்று அவ்வப்போது சமூக ஊடங்களில் பாஜக கேலி, கிண்டல் செய்துவருகிறது.

 TN BJP leader L.Murgan slam DMK President M.K.Stalin
 இந்நிலையில் திமுக எம்.பி.களின் பேச்சுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அட்வைஸ் செய்திருந்தார். இந்த விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கோராத நிலையில், இதுபற்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பாஜக தலைவர் எல்.முருகன் விமர்சித்து இன்று பதிவிட்டுள்ளார். அதில், “திமுக சமூக நீதியை குழிதோண்டி புதைத்து வருகிறது. பட்டியலின மக்களை அவமானப்படுத்திய திமுக MP, MLAக்களை ஸ்டாலின் கண்டிக்கவில்லை.  திமுகவினர் பேசியதை @mkstalin  குரலாகத்தான் பார்க்கிறேன்” என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios