Asianet News TamilAsianet News Tamil

தொலைக்காட்சி விவாத புறக்கணிப்பு முடிந்தது... இனி விவாதங்களில் பங்கேற்கப்போவதாக தமிழிசை திடீர் அறிவிப்பு!

பாஜக சார்பில் பிரதிநிதிகள் யாரும் கலந்து கொள்ளமாட்டார்கள் என முடிவு செய்யப்பட்டுள்ளது என அப்போது தமிழிசை அறிவித்தார். இதனையடுத்து கடந்த ஒன்றரை மாதங்களாக தமிழக பாஜகவினர் யாரும் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கவில்லை.
 

TN BJP functionaries will participate in tv debate
Author
Chennai, First Published Aug 26, 2019, 9:15 PM IST

தமிழக பாஜகவினர் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்காமல் இருந்த நிலையில், இனி மீண்டும் பங்கேற்க பாஜக முடிவு செய்துள்ளது.TN BJP functionaries will participate in tv debate
தொலைக்காட்சி விவாதங்களில் இனி பாஜகவினர் பங்கேற்கமாட்டார்கள் என்று கடந்த ஜூலை மாதம் மாநில தலைவர் தமிழிசை அறிவித்தார். தொலைக்காட்சி விவாதங்களில் சமநிலையும் சமவாய்ப்பும் இல்லை என்பதால். பாஜக சார்பில் பிரதிநிதிகள் யாரும் கலந்து கொள்ளமாட்டார்கள் என முடிவு செய்யப்பட்டுள்ளது என அப்போது தமிழிசை அறிவித்தார். இதனையடுத்து கடந்த ஒன்றரை மாதங்களாக தமிழக பாஜகவினர் யாரும் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கவில்லை.

TN BJP functionaries will participate in tv debate
பாஜகவின் குரலாக வலதுசாரி ஆதரவாளர்களும் பாஜக ஆதரவாளர்களும் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்றுவருகிறார்கள். இந்நிலையில் இனி தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க பாஜக முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தமிழிசை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பவர்களுக்கு பாஜக மாநில பொதுச்செயலாளர் கே.எஸ்.நரேந்திரன் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார்.” என தமிழிசை தெரிவித்துள்ளார்.TN BJP functionaries will participate in tv debate
 மேலும் நரேந்திரன் ஒருங்கிணைப்பின்  கீழ் வானதி சீனிவாசன்,  நயினார் நாகேந்திரன், அரசகுமார், கே.டி. ராகவன், கரு.நாகராஜன், எஸ்.ஆர். சேகர் உள்பட 27 பேர்  தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பார்கள் எனவும் தமிழிசை அறிவித்துள்ளார். இந்த 27 பேருடைய கருத்து மட்டுமே பாஜகவின் கருத்து எனவும் தமிழிசை தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios