Asianet News TamilAsianet News Tamil

டாஸ்மாக்கை திறந்தது ஏன்?... பேரவையில் காரசாரமாக நடந்த விவாதத்தை பட்டென ஆப் செய்த துரைமுருகன்...!

தற்போது 16வது சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், அங்கும் டாஸ்மாக் திறப்பு குறித்த விவாதம் அரங்கேறியுள்ளது. 

TN Assembly tasmac related discussion endup by minister duraimurugan
Author
Chennai, First Published Jun 23, 2021, 10:32 AM IST

கொரோனா 2வது அலை பரவலை கட்டுப்படுத்த மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால், அன்று முதல் மதுக்கடைகளும் மூடப்பட்டன. தளர்வுகளற்ற ஊரடங்கால் கொரோனா தொற்றின் தீவிரம் குறைந்ததை கடந்த முறை தளர்வுகளற்ற ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது, டாஸ்மாக் கடைகளையும் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. கொரோனா பரவல் அதிகம் இல்லாத சென்னை உட்பட, 27 மாவட்டங்களில் ஜூன் 14ம் தேதி முதல் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க அரசு அனுமதி வழங்கியது. 

TN Assembly tasmac related discussion endup by minister duraimurugan

 

இதற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், பாமக, பாஜக சார்பில் போராட்டங்களும் நடைபெற்றது. தற்போது 16வது சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், அங்கும் டாஸ்மாக் திறப்பு குறித்த விவாதம் அரங்கேறியுள்ளது. கடந்த ஆட்சியில் கொரோனா பாதிப்பு குறைவாக இருந்த போது ஸ்டாலின் போராட்டம் நடத்தியதாகவும், தற்போது தொற்று அதிகமுள்ள போதும் மதுக்கடைகளை திறந்தது ஏன்? என அரக்கோணம் அதிமுக எம்.எல்.ஏ. ரவி கேள்வி எழுப்பினார். 

TN Assembly tasmac related discussion endup by minister duraimurugan

 

இதற்கு பதிலளித்து பேசிய மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை என்றும், கொரோனா தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் மட்டுமே டாஸ்மாக் திறக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தார். மேலும் கள்ளச்சாராயம் மற்றும் கள்ளச் சந்தையில் மது விற்பனையை தடுக்கவே டாஸ்மாக் கடைகளை திறந்ததாகவும் விளக்கமளித்தார். 

TN Assembly tasmac related discussion endup by minister duraimurugan

 

அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கடந்த ஜூன் மாதம் 7 ஆயிரம் என்ற எண்ணிக்கை இருந்த கொரோனா பாதிப்பு தற்போது உயர்ந்துள்ளதாக தெரிவித்தார். இதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கடந்த மே மாதம் 7ம் தேதி 26 ஆயிரமாக இருந்த கொரோனா தொற்றின் எண்ணிக்கை, திமுக அரசு எடுத்த நடவடிக்கைகளால் 7 ஆயிரமாக குறைந்துள்ளதாக கூறினார். அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டதால் முழுமையாக செயல்பட முடியவில்லை என விளக்கமளித்தார். அப்போதும் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று, தலைமைச் செயலாளர் தலைமையில் ஆய்வு கூட்டங்களை நடத்தி கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எனக்கூறினார். 

TN Assembly tasmac related discussion endup by minister duraimurugan

இதற்கு பதிலளித்த அமைச்சர் எ.வ.வேலு, தேர்தல் அறிவிப்பால் செயல்பட முடியவில்லை என்றால், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தடுப்பு பணிகளில் ஈடுபட்டதோடு,பேட்டிகளையும் அளித்துள்ளார் என்பதை சுட்டிக்காட்டினார். இப்படி விவாதம் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “உங்கள் ஆட்சியில் நீங்கள் கட்டுப்படுத்தியதாகவும், எங்கள் ஆட்சியில் நாங்கள் கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார்.  

Follow Us:
Download App:
  • android
  • ios