கம்யூனிஸ்ட் கட்சிக்கு தேர்தல் நிதியளித்தது தொடர்பாக பிரேமலதா விஜயகாந்துக்கு விளக்கமளிக்க அவர் என்ன வருமான வரித்துறை அதிகாரியா என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பழனி மலைக்கோவிலில் பிரேமலதா விஜயகாந்த் நேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் மக்களவை தேர்தலில் திமுகவிலிருந்து தேர்தல் நிதியாக கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 25 கோடி ரூபாய் வழங்கியதாக வரும் தகவலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் விளக்கம் அளிக்கவேண்டும் எனக் கூறினார்.

இது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிகாரப்பூர்வமாக தாங்கள் செய்த செலவை தேர்தல் ஆணையத்தில் அறிக்கையாக சமர்ப்பித்து இருக்கிறோம் என தெரிவித்தார். மேலும், பிரேமலதா விஜயகாந்த் விளக்கமளிக்க அவர் என்ன வருமான வரித்துறை அதிகாரியா என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.