என் மீது அவதூறாக செய்தி வெளியிட்ட டைம்ஸ் நவ் தொலைக்காட்சி மீது வழக்கு தொடரப்படும் என தமிழக உள்ளாட்சி துறை 
அமைச்சர் எஸ்.பி. வேலுமணி காட்டமாக தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட அமைச்சர் பதவியை வைத்து தாம் எந்த முறைகேட்டில் ஈடுபடவில்லை என்றும் தனக்கு தெரிந்தவர்களுக்கு முறைகேடாக எந்த ஒதுக்கிடும் செய்யவில்லை என்றும் வேலுமணி உறுதியாக தெரிவித்துள்ளார்.

 

செய்தி வெளியிட்ட தொலைக்காட்சி நிறுவனம், முழுவதுமாக தவறான புள்ளி விவரங்கள் அளித்ததோடு, தனது பெயருக்கு களங்கம் 
விளைவிக்கும் வகையில் செய்திகள் வெளியிட்டதாக கூறினார். இந்த ஆட்சியையும் கட்சியையும் காப்பாற்றுவதற்காக எதையும் செய்ய தயாராக இருப்பதாக கூறினார். ஆட்சியின் மீதும் கட்சியின் மீதும் திட்டமிட்டு பொய் புகார்கள் பரப்பப்படுவதாக தெரிவித்தார்.

குட்கா முறைகேடு ஊழல் தொடர்பாக கேள்விக்கு பதிலளிக்க மறுத்த வேலுமணி வழக்கு நிலுவையில் இருப்பதால் அதைப்பற்றி பேச 
முடியாது என தெரிவித்தார். கோவையில் அளித்த இந்த பேட்டியின்போது, அவருடன் துணை சபாநாயகர் பொள்ளாச்சி சபாநாயகர், எம்.எல்.ஏ.க்கள் அருண்குமார், கனகராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.