ஊரடங்கு உத்தரவு அறிவித்த நாள் முதல் தற்போது வரை சுமார் 407 அம்மா உணவகங்களில் 27 லட்சம் இட்லிகளும்,  16 லட்சம் சப்பாத்திகளும் வழங்கப்பட்டுள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தகவல் தெரிவித்துள்ளார். கொரோனா தோற்று தொடர்பாக மேற்கொள்ளப்பட உள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில் சென்னை ரிப்பன் மாளிகையில் ஆலோசனை நடைபெற்றது அப்போது மாநரகாட்சி சார்பில் செய்தியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்ட புள்ளி விவரங்கள் :- 

சென்னையை பொறுத்த வரையில் சுமார் 447 தனியார் மருத்துவர்கள் மற்றும் துறை அலுவலர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டுள்ளன .  முறைப்படி கைகழுவும் முறைகள் மற்றும் கொரோனா வைரஸ் காய்ச்சல் குறித்து 4 லட்சம் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.  சென்னையில் இதுவரை 81 நபர்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சையில் உள்ளனர் .  இவர்களுடன்  தொடர்பு உள்ள நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர் .  இதுவரையில் வெளிநாட்டிலிருந்து சென்னைக்கு வந்த 23,308 பயணிகள் 28 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தி தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் .  இவர்களில் 3,571 நபர்கள் 28 நாட்களை கடந்து ஆரோக்கியத்துடன் உள்ளனர் .  நோய் உறுதி செய்யப்பட்டவர் வீட்டைச்சுற்றிலும்  உள்ள ஐந்து வட்டங்கள் (Sector) தடுப்பு வளையத்திற்குள் (Containment Sector)  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன 500 வீடுகள் ஒரு சிறு வட்டமாக பிரிக்கப்பட்டு ஒரு சிறு வட்டத்திற்குள் (Sector) ஒரு பணியாளர் வீதம் மொத்தம் சுகாதார மற்றும் மருத்துவ சார் பணியாளர்கள் தினந்தோறும் வீடு வீடாக சென்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர் இப்பணிகளை மண்டல அலுவலர்கள் சுகாதார அலுவலர்கள் மற்றும் நகராட்சி அலுவலர்கள் தினந்தோறும் மேற்பார்வை செய்து கண்காணித்து வருகின்றனர். 

 தற்போது நோய்த்தடுப்பு நடவடிக்கைக்காக 11.50 லட்சம் முகக் கவசங்கள் கொள்முதல் செய்ய பணி ஆணை வழங்கப்பட்டு தற்போது நாலு லட்சம் முகக் கவசங்கள் வழங்கப்பட்டுள்ளது மருத்துவர்களுக்கென 1000  N95முகக்கவசங்கள் வழங்கப்பட உள்ளது ,  6 லட்சம் துணியாலான கையுறைகள் கொள்முதல் செய்ய பணி ஆணை வழங்கப்பட்டு 14,700 கையுறைகள் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன .  2000 லிட்டர் கை சுத்திகரிப்பான்கள் 50,000 லிட்டர் லைசால் கிருமிநாசினி ,  395 கையினால் தெளிக்க கூடிய விசைத் தெளிப்பான்கள் ,  59 வாகனங்களில் பொருத்தக்கூடிய கிருமிநாசினி தெளிப்பான்கள் ,  328.5 மெட்ரிக் டன் பிளீச்சிங்  பவுடர் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டுள்ளது .  சென்னை குடிநீர் வாரியத்தில் இருந்து 27 லாரிகளும் தீயணைப்பு துறையில் இருந்து 23 வாகனங்களும் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன .  தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் நோயினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு மருத்துவ ஆற்றுப்படுத்துதல் மற்றும் ஆலோசனை வழங்குவதற்கென 20 மருத்துவர்கள் மற்றும் 40 தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் கொண்ட குழு செயல்பட்டு வருகிறது .

 

ஊரடங்கு கால நாட்களில் 407 அம்மா உணவகங்கள் மூலம் மாநகராட்சி பணியாளர்கள் வீடற்றோர் சாலைகளில் வசிப்போர் விடுதிகளில் தங்கி இருப்பவர்களுக்கு 24-3-2020 முதல் தற்போது வரை  26.32 லட்சம் இட்லிகளும் ,  7. 27 லட்சம் கலவை சாதங்களும் மற்றும் 15.3 லட்சம் சப்பாத்திகளும் வழங்கப்பட்டுள்ளன .  மார்ச் 24ஆம் தேதி முதல் ஏப்ரல் ஒன்றாம் தேதி வரை 30 விழுக்காடு பயணிகள் கூடுதலாக அனைத்து அம்மா உணவகங்களையும் பயன்படுத்தியுள்ளனர் .  மேலும் ஊரடங்கு காலங்களில் தற்போது வரை 14. 74 லட்சம் பயணிகள் பயனடைந்துள்ளனர் .  மாநகராட்சியில் மார்ச் 22 ஆம் தேதி முதல்  ஏப்ரல் 2ஆம் தேதி வரை 38 வீடற்றோருக்கான  காப்பகங்கள் அரசு மருத்துவமனைகளில் உள்ள 13 சிறப்பு காப்பகங்கள் ,  மற்றும் 41 நிவாரணம் மையங்களில் மொத்தம் 4 ஆயிரத்து 238 பேர் தங்க வைக்கப்பட்டு நோய் தடுப்பு நடவடிக்கையாக முகக் கவசங்கள் மற்றும் கழிவு சுத்திகரிப்பான்கள் வழங்கப்பட்டுள்ளன என அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்துள்ளார் .