Asianet News TamilAsianet News Tamil

தமிழக்தில் இடியுடன் கூடிய மழை..!! இந்த மாவட்டங்களில் அடித்து ஊத்தப்போகிறது என எச்சரிக்கை.

வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், காரைக்கால் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

Thunder showers in Tamil Nadu , Warning as these districts are going to be blown away.
Author
Chennai, First Published Sep 24, 2020, 2:01 PM IST

வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், காரைக்கால் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

மேலும் அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் தருமபுரி சேலம் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

Thunder showers in Tamil Nadu , Warning as these districts are going to be blown away.

சேலம், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்சையும்,  குறைந்தபட்ச வெப்பநிலை  26டிகிரி செல்சியஸ்சையும் ஒட்டி பதிவாக கூடும் என கூறப்பட்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும், அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்சையும், குறைந்த பட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

Thunder showers in Tamil Nadu , Warning as these districts are going to be blown away.

மேலும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 24-9-2020 இரவு 11:30 மணி வரை கடல் உயர் அலை 3 மீட்டர் முதல் 3.6 மீட்டர் வரை எழும்பக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 
 
Follow Us:
Download App:
  • android
  • ios