Asianet News TamilAsianet News Tamil

புதுப்புது யுக்தி.. திமுக கோட்டையில் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டையில் குஷ்பு... கதிலங்கும் எதிர்முகாம்..!

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் குஷ்பு மக்களை சந்தித்து தங்களது வெற்றி சின்னமாம் தாமரைக்கு வாக்களிக்கும்படி இறுதி கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். 

thousand lights constituency... Khushbu final phase of the election campaign
Author
Chennai, First Published Apr 4, 2021, 3:42 PM IST

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் குஷ்பு மக்களை சந்தித்து தங்களது வெற்றி சின்னமாம் தாமரைக்கு வாக்களிக்கும்படி இறுதி கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். 

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை மறுநாள் நடைபெற  உள்ளது. இந்நிலையில், இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரை இன்று இரவு 7 மணியோடு நிறைவடைய உள்ளது. எனவே அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

thousand lights constituency... Khushbu final phase of the election campaign

இந்நிலையில், திமுகவின் கோட்டையாக கருதப்படும் ஆயிரம் விளக்கு தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் பிரபல நடிகை குஷ்பு போட்டியிடுகிறார். வேட்புமனு நாள் தாக்கல் செய்த நாளில் இருந்தே ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பு தன்னுடைய ஆதரவாளர்களுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். குஷ்புவிற்கு ஆதரவாக அவருடைய கணவரும், பிரபல நடிகர், இயக்குநருமான சுந்தர் சியும் வீடு, வீடாக சென்று, துண்டு பிரசுரங்களை விநியோகித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஆரம்பத்தில் சில நாட்கள் மட்டுமே திறந்த வெளி ஜீப்பில் பயணம் செய்து வாக்கு சேகரித்து வந்த குஷ்பு, அதன் பின்னர் மக்களோடு மக்களாக இருக்க வேண்டும் என்பதற்காக வீதி, வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

thousand lights constituency... Khushbu final phase of the election campaign

இவர் செல்லும் இடங்களில் எல்லாம் பெண்கள் சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர். மேலும் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் வயது வித்தியாசம் பார்க்காமல் குஷ்புவுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதிலும்,  உரையாடுவதிலும் மிகுந்த ஆர்வம் காட்டினர். தொகுதி மக்களின் அடிப்படை தேவைகளான சுகாதாரம், குடிநீர், கல்வி, சாலை வசதிகள் ஆகிய பிரச்சனைகளை தீர்த்து வைப்பதாக குஷ்பு வாக்குறுதி அளித்துள்ளார். குறிப்பாக ஏழை குடும்பத்தில் பிறக்கும் பெண் குழந்தை பெயரில் ரூ.1 லட்சம் டெபாசிட் செய்யப்படும், இஸ்லாமிய பெண்கள் வீட்டில் இருந்தபடியே தொழில் தொடங்க கடனுதவி செய்து தரப்படும் போன்ற வாக்குறுதிகள் பெண் வாக்காளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

thousand lights constituency... Khushbu final phase of the election campaign

தினந்தோறும் ஆயிரம் விளக்கை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்த குஷ்பு, இன்று இறுதிக்கட்ட பிரச்சாரம் என்பதால் ஒட்டுமொத்த தொகுதியிலும் காலை முதலே பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். திறந்தவெளி ஜீப்பில் கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, வள்ளுவர் கோட்டம், தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். ஆயிரம் விளக்கு தொகுதி திமுகவிற்கு சாதகமானது என்பதை உணர்ந்து புதுப்புது யுக்திகளை கையாண்டு மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரித்து வரும் குஷ்புவிற்கு வெற்றி வாய்ப்புகள் பலமாக இருப்பதாகவே கூறப்படுகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios