அதிமுகவை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள் என்றும், அதிமுக பீனிக்ஸ் பறவை மீண்டும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளர்.

‘ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பல்வேறு அணிகளாக சிதறிய அதிமுக கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., அணிகள் இணைந்தன. இந்த இணைப்புக்குப் பிறகு ஓ.பி.எஸ்.-க்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. 

எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டி எதிர்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இன்று மீண்டும்  திமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர் ஆளுநரை சந்திக்க உள்ளனர்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா, தமிழக மாவட்டங்க தலைநகரங்களில் நடத்தப்பட்டு வருகிறது. டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் எடப்பாடிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றனர்.

இந்த நிலையில், தர்மபுரியில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், அதிமுக பீனிக்ஸ் பறவை என்றும் இரட்டை இலை சின்னம் மீட்கப்படும் என்றும் கூறினார்.

அதிமுகவை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள் என்று கூறினார். கட்சியில் இருந்து செல்பவர்களைப் பற்றி கவலையில்லை என்று  அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.