சிஸ்டம் சரியில்லையென்று கூறும் பலரிடம் வாக்காளர் அடையாள அட்டை கூட இல்லையென்று நடிகர் ரஜினியை சீண்டி வீடியோ வெளியிட்டுள்ளார் மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்.

வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள கமல்ஹாசன் ரஜினியையும் விட்டு வைக்கவில்லை. அந்த வீடியோவில்..

2017ம் ஆண்டு தனது ரசிகர்களை சந்தித்த ரஜினி தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை ஊழல்கள் ஜனநாயகம் கெட்டு போயிருப்பதாகவும் அதையெல்லாம் சரி செய்தால் தான் தமிழகம் தலைநிமிறும் என்று பேசியிருந்தார்.அப்போது இருந்தே நெட்டிசன்களின் டேக்காக மாறிப்போனது இந்த வாசகம்.சிஸ்டம் சரியில்லை எல்லோரும் திருட்டு பயலுக என்று சொல்லுபவர்களிடம் வாக்காளர் அடையாள அட்டை கூட இல்லை.
18வயது நிரம்பிய வாக்காளன் தனது கடமையை சரிவர செய்ய வேண்டும்.அதே போன்று பெண்களும் வாக்களிக்கும் கடமையை சரியாக செய்ய வேண்டும். அவர்களுடைய வாக்குகள் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கும். பீகாரில் 12 வாக்குகள் பெற்றவர் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதை நினைவு கூர்ந்தார்.  எனவே தன்னுடைய கடமையை சரிவர செய்யாவிட்டால் தன்னுடைய உரிமைகளை தானாகவே இழந்து விடும் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.