Asianet News TamilAsianet News Tamil

கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வரவேண்டும்..!! முதல்வர் எடப்பாடி அழைப்பு..!!

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

Those who have recovered from corona should come forward to donate plasma, Chief Minister Edappadi calls
Author
Chennai, First Published Aug 7, 2020, 3:14 PM IST

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிகத் தீவிரமாக பரவி வருகிறது. அதேபோல் அந்த வைரஸில் இருந்து மீண்டு வருபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் வைரஸ் தொற்று கண்டறிவதற்கான பரிசோதனைகளை தீவிரப்படுத்தும் முயற்சியில் அரசு வேகமெடுத்து வரும் நிலையில், பிளாஸ்மா தானம் குறித்து முதல்வர் வலியுறுத்தியுள்ளார். 

Those who have recovered from corona should come forward to donate plasma, Chief Minister Edappadi calls

நெல்லை மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, 196.75  கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள திட்டங்களையும் தென்காசி மாவட்டத்திற்கான 78.77 கோடி மதிப்பிலான திட்டங்களையும் துவக்கி வைத்தார்.  வீட்டுமனை பட்டா, அம்மா இரு சக்கர வாகனம், வேளாண்மை இயந்திரங்கள் என அனைத்து துறைகளின்  சார்பிலும் 5,982 பயணிகளுக்கு 36 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது பேசிய அவர், கொரோனா நெருக்கடி காலத்திலும் மக்கள்  நல்ல திட்டங்கள் தொடர்கிறது என்றும் விவசாயிகள், தொழில் முனைவோர் வைத்த பல்வேறு கோரிக்கைகளை அரசு பரிசீலனை செய்து நிறைவேற்றும் எனவும் கூறினார். 

Those who have recovered from corona should come forward to donate plasma, Chief Minister Edappadi calls

மேலும், கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது, குறிப்பாக பிளாஸ்மா வங்கி துவக்கப்பட்டு பிளாஸ்மா தானம் பெறப்பட்டு கொரோனா தீவிரமாக பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வைரசால் பாதித்தவர் சிகிச்சைக்குப்பின் குணமடைந்து வீடு திரும்பிய பின்னர்,  நிச்சயம் அவர் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும். இதன் மூலம் பல உயிர்களை காப்பாற்ற முடியும் என்றார்.  அதேபோல் கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும், அதிக முதலீடுகளை ஈர்த்த மாநிலமாக தமிழகம் உள்ளது என்ற அவர். வேகமாக இ- பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும், முறையாக அத்தியாவசிய தேவைகளுக்கு செல்வோருக்கு நிச்சயம் இ-பாஸ் வழங்கப்படும் எனவும் கூறினார். அதேபோல் வெளிமாநில தொழிலாளர்களை அழைத்து வருவதற்கு இ-பாஸ் வழங்கப்படும் என்றார்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios