Asianet News TamilAsianet News Tamil

பெரியாருக்கு சிலை எதற்கு என கேட்பவர்கள் பெரியாரை சிதைக்க பார்கிறார்கள்... திருமாவளவன் குற்றச்சாட்டு..!

பெரியாருக்கு சிலை எதற்கு என கேட்பவர்கள் பெரியாரை சிதைக்க பார்கிறார்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். 

Those who ask what is the idol for Periyar are trying to destroy Periyar ... Thirumavalavan accused
Author
Tamil Nadu, First Published Sep 17, 2021, 1:10 PM IST

பெரியாருக்கு சிலை எதற்கு என கேட்பவர்கள் பெரியாரை சிதைக்க பார்கிறார்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். 

தந்தை பெரியாரின் 143-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை வேப்பேரி பெரியார் திடலில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் திருமாவளவன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’பெரியார் தனி நபர் அல்ல; அவர் ஒரு கோட்பாடு. பெரியாரை எதிர்ப்பதாக நினைத்துதான் திமுகவை எதிர்க்கிறார்கள். அண்ணாவை எதிர்க்கிறார்கள். கலைஞரை எதிர்க்கிறார்கள். Those who ask what is the idol for Periyar are trying to destroy Periyar ... Thirumavalavan accused

பெரியார் எதிர்ப்பு என்பதுதான் சனாதன சக்திகளின் மிக முக்கிய கோட்பாடாக உள்ளது. விளிம்பு நிலை மக்களை முன்னேற செய்தவர், இடஒதுக்கீடு மூலம் உழைக்கும் மக்கள் அதிகாரம் பெற்று முன்னேற செய்தவர் தந்தை பெரியார். இவற்றையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாமல் பெரியாருக்கு எதிரான அரசியலை கட்டமைத்து வருகின்றார்கள்.

பெரியாருக்கு சிலை எதற்கு என கேட்பவர்கள் பெரியாரை சிதைக்க பார்கிறார்கள். அது சனாதனத்திற்கு துணையாக நிற்கும் என்பதை தமிழ் தேசிய உணர்வாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என பேசினார். கடந்த ஆட்சியில் பெரியாரை அம்பேத்கரை அவமதித்தர்வகளை கட்டுப்படுத்த வேண்டும், அவர்கள் மீது வழக்கு இருந்தால் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் பெரியார், அம்பேத்கர் சிலைகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். Those who ask what is the idol for Periyar are trying to destroy Periyar ... Thirumavalavan accused

தமிழ்நாடு அரசு தி.மு.க அரசு அல்ல. பெரியார் அரசு என்பதற்கு 100 நாள் ஆட்சியே சாட்சி. சாதி ஒழிப்பு நாளை சமூக நீதி நாள் என துணிச்சலுடன் அறிவித்த முதல்வரை விடுதலை சிறுத்தைகள் பாரட்டுகிறது. அதிமுக ஆட்சியில் ஊழல் தலை விரித்தாடியது அனைவருக்கும் தெரியும். ஊழல் செய்ததால் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறுகிறது. ஆனால் அதிமுகவினர் அரசியல் பழிவாங்கல் என லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை திட்டமிட்டு திசைத்திருப்பி வருகின்றனர்’’என அவர் தெரிவித்தார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios