நாளை மு.க அழகிரி நடத்தும் ஆலோசனை கூட்டத்திற்கு திமுக குடும்ப கட்சி என்று நினைப்போரும், திமுக மீது அதிருப்தியில் உள்ளவர்ளும் கலந்துகொள்ள வாய்ப்புள்ளது என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.  ஆனால் அதிமுகவில் இருந்து ஒருவர் கூட அழகிரியிட் கூட்டத்திற்கு செல்ல கடுகளவும் வாய்ப்பு இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.  

மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி சார்பாக தூய்மை பணியாளர்களுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினர். இதில் கலந்து கொண்டு விட்டு செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு வைரஸ் தொற்று இரண்டாவது அலை  வருகிற சூழ்நிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மதுரை மாநகராட்சியின் சார்பாக எடுத்து வருகிறோம். அதனடிப்படையில் தற்சமயம்  ட்ரை சைக்கிள் என்று சொல்லக்கூடிய மிதிவண்டிகளை தூய்மைப் பணியாளர்களுக்கும் வழங்கியுள்ளோம். தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை.

   

தமிழக முதலமைச்சர் என்ன வழிகாட்டுதல் சொல்லியுள்ளார்களோ அதனடிப்படையில் வழங்குவோம்.2 கோடியே 6 லட்சம் அட்டைதாரர்களுக்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு இந்த வைரஸ் காலத்தில் சர்க்கரை அட்டை வைத்திருப்பவர்கள் கூட அரிசி கார்டாக மாற்றி அவர்களும் பெற்றுக்கொள்ளலாம் என்ற அறிவிப்பு உள்ளது. திமுகவில் ஸ்டாலின் குடும்பம் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வருவதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே  அதிருப்தியில் உள்ளவர்கள் மட்டுமே அழகிரி ஆலோசனைக் கூட்டத்திற்கு சொல்வார்களே தவிர எங்கள் கட்சியில் இருந்து யாரும் செல்வதற்கு கடுகளவும் வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்தார்.

 

எல்லாம் சரியாகிவிடும் எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்வாரே தவிர கமலஹாசன் வேறொன்றும் செய்ய விடமாட்டார். ஆனால் அவர் திறமையான நடிகர் என்பதில் எந்தவித மாற்றுகருத்தும் இல்லை. திமுக தலைவர் ஸ்டாலின் தினந்தோறும் ஒரு புது கருத்தைச் சொல்கிறார் அப்படி என்றால் மட்டுமே  ஊடகங்களில் வரும் என நினைக்கிறார். பழைய தகவல்களை சொன்னால் ஊடகங்களில் வராது அல்லவா அதனால் தினந்தோறும் ஒரு புதிய கருத்து சொல்வதை வாடிக்கையான வைத்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்டாலின் சொன்னது போல அனைத்து கடன் வாபஸ், தேசிய வங்கி, மாநில வங்கி, கூட்டுறவு வங்கி அனைத்து கடன்களும் வாபஸ் என தேர்தல் அறிக்கை தயாரிப்பு செய்வதை தவிர, சொல்வாரே தவிர, வேறென்ன செய்யப் போகிறார். சினிமா நடிகரை போல முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை பார்க்க கூட்டம் கூட்டமாக மக்கள் அலை மோதுகிறார்கள். 

கூட்டணி அமைத்த பிறகு மற்றொரு தேர்தல் பரப்புரையை எவ்வாறு கொண்டு போவது என்று திட்டமிடுவோம். இப்போதைக்கு இந்த தேர்தல் பரப்புரை என்பது எங்களது திட்டங்களையும் மக்களுக்கு அது சென்றுள்ளதா என்பதை பார்க்கதான். தேர்தல் பரப்புரை செய்கிறோம். மதுரையில் கிராமங்களே இல்லை ஆனால் கிராமசபை கூட்டம் நடத்துகிறது திமுக 100 ரூபாய், 200 ரூபாய் கொடுத்து கூட்டம் சேர்க்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.