thoppi getting criticized in social media



ஆர்கே நகர் சட்டமன்ற தேர்தலுக்கு, சசிகலா அணியின் டி.டி.வி.தினகரனுக்கு தொப்பி சின்னத்தை தலைமை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

சின்னம் ஒதுக்கி அடுத்த சில நிமிடங்களில் வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர் என பல சமூக வலைதளங்களில் நமது நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.

* சந்திரமுகி படத்தில், “ரா ரா... சரசுக்கு ரா ரா...” பாடலில் ரஜினி, “தொப்பி தொப்பி” என சத்தம் போடுவார். அந்த வீடியோ விஷுவலை போட்டு, நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

* மேலும், “ஆட்டோ ரிக் ஷ வுக்கு பதில் தொப்பி சின்னம் தான் வேணுமா சசிகலா அணி 

அப்போதான் மக்கள் தலையில் குல்லா போட முடியும் நல்ல சின்னம் தான்” என்பது உள்பட பல்வேறு வாசகங்கள் வைரல் போல பரவி வருகின்றன.

* தொப்பி போட்டவங்க எல்லாம் எம்.ஜி.ஆர் ஆக முடியாது. 

* எம்ஜிஆர் நினைவாக தொப்பி சின்னம் கேட்டு வாங்கினோம் - தம்பிதுரை # தொப்பி வாங்கலாம்..ஓட்டு வாங்க முடியாது...!

* ஹெ!,  குதிரை க்கே ரெக்க முளைக்க செய்தவங்கடா எங்க அம்மா...