வருகிற மக்களவை தொகுதியில் கனிமொழி தூத்துக்குடியில் போட்டியிடுவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. அவர் இந்த தொகுதியில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மத்திய அமைச்சராவர் என்ற திமுக முக்கிய நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார். 

மக்களவை தேர்தல் தேதி தொடர்பாக மார்ச் முதல்வராத்தில் அறிவிக்க உள்ளனர். இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். எந்த கட்சி எந்த கூட்டணியல் சேரும் என்பது இன்னும் உறுதியாக நிலையில், தலைவர்கள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  

ஏற்கனவே திமுக மகளிர் அணி செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி தொகுதியில் போட்டியிடுவதாக அரசல்புரசலாக பேசப்பட்டு வந்தது. மேலும், அவ்வப்போது தூத்துக்குடி சென்று கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சந்தித்து வந்தார். 

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திமுக வடக்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.,வுமான கீதாஜீவன் கலந்து கொண்டார். பின்னர் அவர் பேசுகையில் ’’மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். தூத்துக்குடி மக்களவை தொகுதியில் கனிமொழி போடியிட உள்ளார். 

ஏற்கனவே 10 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். ஆங்கிலத்தில் அவர் சரளமாக பேசக்கூடியர். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு காங்கிரஸ் ஆட்சியமைக்கும் போது கனிமொழி மத்திய அமைச்சராவது உறுதி’’ என்று கூறியுள்ளார். காங்கிரஸ் மத்தியில் ஆட்சி அமைத்தால் கனிமொழி மத்திய அமைச்சராவது  உறுதி என்பதை கீதாஜீவன் வெளிப்படுத்தி இருக்கிறார்.