Asianet News TamilAsianet News Tamil

நாராயணசாமி சொன்ன பொய்யை இந்த தேசமே பார்த்து சிரித்தது... பொளந்து கட்டிய மோடி..!

பொய் சொல்வதில் அனைத்து பதக்கங்களையும் பெற்றவர்கள் காங்கிரஸ்காரர்கள். 

This nation itself laughed at the lie told by Narayanasamy ... Modi who was bitten ..!
Author
Pondicherry, First Published Feb 25, 2021, 2:11 PM IST

நாராயணசாமி மீது ஒரு பெண் குறை கூறிய வீடியோவை தேசமே பார்த்தது, முதலமைச்சர் தனது சொந்த கட்சி தலைவரிடமே பொய் கூறியனார் என பிரதமர் மோடி இடித்துரைத்தார். 

காரைக்காலில் ரூ.491 கோடி மதிப்பிலான ஜிப்மர் கிளை மருத்துவமனை உள்பட பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அரசு முறை பயணமாக புதுச்சேரி மாநிலத்திற்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். அங்கு அவருக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் அரசியல் கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர், ஜிப்மர் கலையரங்கில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.This nation itself laughed at the lie told by Narayanasamy ... Modi who was bitten ..!
 
அங்கு காணொலி காட்சி வழியாக விழுப்புரம் – நாகை இடையில் ரூ.2 ஆயிரம் கோடியினாலான 4 வழிச்சாலை, சட்டநாதபுரம் முதல் நாகப்பட்டினம் வரையிலான 56 கி.மீ. சாலை பணி, ரூ.491 கோடியில் காரைக்காலில் ஜிப்மர் கிளை மருத்துவமனை கட்டிடப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதைத் தொடர்ந்து, சாகர் மாலா திட்டத்தின் கீழ் ரூ.44 கோடியில் சிறிய துறைமுக மேம்பாட்டு பணி மற்றும் உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டரங்கில் ரூ.78 கோடியில் 400 மீட்டர் தடகள பயிற்சிக்கு சிந்தடிக் டிராக் அமைக்க பணி என மொத்தம் ரூ.3023 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைத்தார்.This nation itself laughed at the lie told by Narayanasamy ... Modi who was bitten ..!
 
பின்னர், நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ’’புதிய மக்கள் பயனடையவே புதிய சாலைகளும், இளைஞர்கள் விளையாட்டில் திறன் பெறவும் புதிய விளையாட்டு மைதானம் கைகொடுக்கும். தரமான மருத்துவ வசதி கிடைக்கும் நோக்கில் ஜிப்மர் மருத்துவமனையில் ரத்த ஆய்வு பிரிவு தொடங்கப்படுகிறது.This nation itself laughed at the lie told by Narayanasamy ... Modi who was bitten ..!

பாரதியார் உள்பட பல கவிஞர்களின் தாய்வீடாக புதுச்சேரி இருக்கிறது. புதுச்சேரிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும். புதுச்சேரி மக்கள் பல மொழிகளை பேசினாலும் ஒற்றுமையின் அடையாளமாக திகழ்கின்றனர். பொய் சொல்வதில் அனைத்து பதக்கங்களையும் பெற்றவர்கள் காங்கிரஸ்காரர்கள். நாராயணசாமி மீது ஒரு பெண் குறை கூறிய வீடியோவை தேசமே பார்த்தது, முதலமைச்சர் தனது சொந்த கட்சி தலைவரிடமே பொய் கூறியனார்'’எனத்தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios