வங்கி அதிகாரிகள் இரண்டு நாள் வேலை  நிறுத்தப் போராட்டத்தில் ஈடு பட உள்ளதால் இம்மாத இறுதியில் வங்கிகள் ஐந்து நாட்கள்  முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பண பரிவர்த்தனைகள் எதுவும் நடைபெறாது என்பதால் மாத ஊதியம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 10 பொதுத்துறை வகைகள் இணைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் போராட்டம் அறிவித்தனர். ஆனால்  அதனால் எந்த பலனும் ஏற்படவில்லை,  எனவே வங்கி இணைப்பு அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி வங்கி அதிகாரிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு, அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம்,  உள்ளிட்ட 4 க்கும் மேற்பட்ட சங்கங்கள் இணைந்து வரும் 26 மற்றும் 27ம் தேதிகளில் வேலை நிறுத்தம் செய்ய அறிவிப்பு  வெளியிடுட்டுள்ளனர்.  இந்நிலையில் இந்திய வங்கிகள் சங்கப் பிரதிநிதிகளை அழைத்து போராட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என தொழிலாளர் நல ஆணையர் டில்லியில் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அப்பேச்சுவார்த்தையில் இருதரப்பிலும் உடன்பாடு எட்டப்படாததால் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை  போராட்டத்திலிருந்து பின்வாங்க முடியாது என வங்கி அதிகாரிகள் தீர்மானமாக தெரிவித்துள்ளனர். எனவே திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்றும்உறுதியாக தெரிவித்துள்ளனர். 

இதனால் இந்த மாத இறுதியான  26, 27 ஆகிய இரண்டு தினங்கள் வங்கி அதிகாரிகள் வேலைநிறுத்தம்  வங்கிகள் என்பதால் வங்கிகள் இயங்காது. 28 ஆம் தேதி நான்காவது சனிக்கிழமை என்பதால் அன்றைய தினமும் வங்கிகளுக்கு விடுமுறை.  29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை,  செப்டம்பர் 30 ஆம் தேதி அரையாண்டு கணக்கு முடிக்கும் தினம் என்பதால் அன்று வாடிக்கையாளர்கள் சேவை நடைபெறாது,

 

எனவே மொத்தத்தில் இந்த மாத இறுதியில் ஐந்து தினங்கள் வங்கி சேவை முடங்கும்  நிலை ஏற்பட்டுள்ளது. மாத கடைசியில் வங்கிகள் இயங்காது என்பதால் மாத சம்பளதாரர்களுக்கு ஊதியம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது