ஆன்மீக பயணமாகவே இமயமலைக்கு வந்துள்ளேன் எனவும் அரசியல் பயணம் இல்லை எனவும் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார். மேலும் உடல்நலம் குன்றிய நண்பர் அமிதாப் பட்சன் உடல் நலம் பெற பிரார்த்திக்கிறேன் எனவும் தெரிவித்தார். 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது படங்களின் ரீலீசுக்கு முன்பு எப்போதும் இமயமலைக்குச் சென்று தனது குருவான பாபாவிடம் ஆசிபெறுவது வழக்கம். இந்நிலையில் அடுத்த மாதம் ரஜினி நடித்த காலா படம் ரிலீசாக உள்ள நிலையில் வழக்கம்போல் ரஜினி இமயமலைக்கு பயணம் சென்றுள்ளார்.

ரஜினிகாந்த் தனது ஆன்மீக அரசியல் அறிவிப்பை வெளியிட்ட பிறகு முதன் முறையாக தற்போது  இமயமலைக்கு சென்றுள்ளார். அங்கு 10 முதல் 15 நாட்கள் தங்க ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளார்.

இதனிடையே  இந்தி நடிகர் அமிதாப் பச்சனுக்கு படப்பிடிப்பின் போது திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமிதாப் பச்சனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று உத்தரகாண்ட் டோராடூனில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், ஆன்மீக பயணமாகவே இமயமலைக்கு வந்துள்ளேன் எனவும் அரசியல் பயணம் இல்லை எனவும் விளக்கம் அளித்தார். 

மேலும் உடல்நலம் குன்றிய நண்பர் அமிதாப் பட்சன் உடல் நலம் பெற பிரார்த்திக்கிறேன் எனவும் தெரிவித்தார்.