சென்னையில் கூட்டம் கூட்டமாக மசூதிகளில் பதுங்கி இருக்கும் வெளிநாட்டை சேர்ந்த மதப்பிரச்சாரகர்களால் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி ஏற்பட்டு வருகிறது. 

சென்னை, முத்தியால்பேட்டையில் பதுங்கி இருந்த எத்தியோப்பியா நாட்டைச் சேர்ந்த 3 பெண்கள் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை பாரிமுனையை அடுத்த முத்தியால்பேட்டை அப்பு மேஸ்திரி தெருவில் உள்ள மசூதி ஒன்றில் எத்தியோப்பிய நாட்டைச் சேர்ந்த இஸ்லாமிய மதகுருக்கள் 5 பேரும், பெண்களும் தங்கி இருப்பதாக முத்தியால்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று அங்கு விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் 8 பேரும் சுற்றுலா விசாவில் வந்து மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

அரசு எச்சரித்தும் தங்களை பரிசோதனைக்கு உட்படுத்தாமல் தலைமறைவாக இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனையடுத்து முத்தியால்பேட்டை போலீசார் 8 பேரையும் கைது செய்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்தனர். 

அவர்களுக்கு கொரோனா அறிகுறி இல்லாததால், அதன் பின்னர் நீதிபதி முன் ஆஜர்படுத்தி புழல் சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர். கொரோனா தொற்று பரவிய பகுதியாக அப்பு மேஸ்திரி தெரு போலீசாரால் சீல் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் மசூதியில் பதுங்கியிருந்த எத்தியோப்பியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை, பழைய பல்லாவரம் பகுதியில் நடேசன் சாலையில் கவிதாபண்ணை அருகில் உள்ள மசூதியில் சிலநாட்களாக பதுங்கியிருந்த 16 எத்தியோப்பிய நாட்டு நபர்களை இன்று காவல்துறையினரின் உதவியுடன் சுகாதாரத்துறையினர் அழைத்துச் சென்றனர். ஊருக்கு சம்பந்தமில்லாதவர்கள். யாருக்கும் தமிழ் தெரியவில்லை. எங்கிருந்து வந்தனர்.

இந்நிலையில் கூட்டம் கூட்டமாக மசூதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டவர்களின் நோக்கமென்ன என்று தெரியவில்லை. இப்போது புரிகிறதா? சி.ஏ.ஏ., என்.ஆர்.சி தேவை என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.