மசூதிகளிலும், சர்சுகளிலும் மத பிரச்சாரங்களை விட அரசியல் பிரச்சாரங்களே அதிகம் நடைபெறுகிறது என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், ‘’மசூதிகளிலும், சர்சுகளிலும் மத பிரச்சாரங்களை விட அரசியல் பிரச்சாரங்களே அதிகம் நடைபெறுகிறது. இன்னொரு மதம் இந்த தேசத்தை ஆக்கிரமிக்க அனுமதிக்க முடியாது. இப்படியே விட்டுவிட்டால் இந்தியாவுக்குள் யார் வேண்டுமானாலும் வரலாம். இந்தியா திறந்த வீடு மாதிரி கிடக்கணும் யார் வேண்டுமானாலும் வந்து சூறையாடி விட்டு போய் விடுவார்கள். மீண்டும் நாம் 3 வது பிறஜைகளாக 4 வது அடிமைகளாகத்தான் இருக்க வேண்டும்.  எனவே இந்தக் குடியுரிமை சட்டம் வலுவாக்கப்பட வேண்டும். ஏனென்றால் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பல்வேறு சக்திகள் வேகமாக இந்தியாவுக்குள் புகுந்து வேலை செய்கிறது. 

இந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே எத்தனை சர்ச்சுகள், மசூதிகளில் அரசியல்வாதிகள் வேலை செய்தார்கள் தெரியுமா? இப்போது அங்கெல்லாம் வெறும் மதப்பிரச்சாரம் கிடையாது. அனைத்தும் அரசியல் பிரச்சாரம் தான். பாதிரியார்களெல்லாம் அம்மணமாக வெளியில் வந்து விட்டார்கள். எல்லோரும் இந்திய இறையான்மைக்கு எதிராக தான் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். ஆகையால், இன்னொரு மதம் இந்த தேசத்தை ஆக்கிரமிக்க அனுமதிக்க முடியாது.  இந்தியாவின் பாரம்பரியமும், பண்பாடும் கட்டிக்காக்கப்பட வேண்டும்.

 

அதற்கு புதிய தமிழகம் கட்சியை சேர்ந்தவர்கள் முதல் வீரர்களாக இருப்பார்கள். யார் வேண்டுமானாலும் வந்து தேய்த்து விட்டு அள்ளிவிட்டு போகலாம். எது வேண்டுமானாலும் பண்ணலாம். என்ன நாடு இது? இனி நம்முடைய உண்மையான அடையாளத்தை இழக்க முடியாது’’என அவர் கூறியுள்ளார்.