வெற்றி பெறுவோர் ஒருவர் மேயராக்கப்படுவர் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போட்டி அதிகமாக உள்ளதால் மேயர், துணை மேயர்,  நகராட்சி, பேரூராட்சி பதிவிகளுக்கு மறைமுக தேர்தலில் யாரை முன்னிறுத்துவது என்பது குறித்து மாவட்ட வாரியாக திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை நடத்தி வருவதாகவும், வெற்றி பெற்றுள்ள பட்டியலின பெண்களில் ரிப்பன் மாளிகையை ஆளப்போகும் மேயர் பதவி யாருக்கு ஒதுக்கப்படுவது என்பது மிகப் பெரும் கேள்வியாக உள்ளது. 

சென்னை மாநகராட்சியின் மேயர் பதவிக்கு 2 பெண்கள் பெயர் தீவிர பரிசீலனையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மாநகராட்சி தேர்தலில் திமுக வேட்பாளர்கள் 153 வார்டுகளிலும், கூட்டணி கட்சிகளுடன் சேர்த்தால் 167 வார்டுகளிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது. வெற்றி பெற்றவர்கள் வரக்கூடிய மார்ச் 2ம் தேதி பதவி ஏற்க உள்ளனர். சென்னை மாநகராட்சி மேயர் பதவி இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை மேயர் பதவி யாருக்கு கிடைக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

சென்னை மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின சமூக பெண்களுக்கு ஒதுக்கப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள மொத்தம் 200 வார்டுகளில் 16 வார்டுகள் பட்டியலின மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வார்டுகளில் வெற்றி பெறுவோர் ஒருவர் மேயராக்கப்படுவர் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போட்டி அதிகமாக உள்ளதால் மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி பதிவிகளுக்கு மறைமுக தேர்தலில் யாரை முன்னிறுத்துவது என்பது குறித்து மாவட்ட வாரியாக திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை நடத்தி வருவதாகவும், வெற்றி பெற்றுள்ள பட்டியலின பெண்களில் ரிப்பன் மாளிகையை ஆளப்போகும் மேயர் பதவி யாருக்கு ஒதுக்கப்படுவது என்பது மிகப் பெரும் கேள்வியாக உள்ளது. 

அந்தவகையில், கொளத்தூர் தொகுதி 70வது வார்டில் போட்டியிட்ட எம்பிஏ பட்டதாரியான ஸ்ரீதனி என்பவருக்கு மேயர் பதவி கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. கொளத்தூர் சட்டமன்ற தொகுதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெற்றி பெற்ற தொகுதி என்பதால் அந்த தொகுதிக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடிய வகையில் ஸ்ரீதனிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதேபோல் திருவிக நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 74வது வார்டில் போட்டியிட்ட பிரியா ராஜன் பெயரும் மேயர் பதவிக்கு பரிசீலனையில் உள்ளது. 23 வயதான பிரியா ராஜன் எம்.காம் முதுநிலை பட்டதாரி. இன்னும் திருமணம் ஆகவில்லை.

இதேபோல் ஆயிரம்விளக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 116 வது வார்டில் இருந்து தேர்வான நந்தினி என்பவரின் பெயரும் பெயர் பட்டியலில் உள்ளது. திமுகவைப் பொறுத்தவரையில் வடசென்னை பகுதியில் இருந்து இதுவரை யாரும் மேயரானதில்லை , இதனால் இம்முறை வட சென்னையை சேர்ந்தவர்கள் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. சென்னை மாநகராட்சி மேயர் பதவி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பதவி என்பதால் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து முதலமைச்சர் அதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.