Asianet News TamilAsianet News Tamil

அய்யோ... அய்யய்யோ... இந்தியாவுக்கா இந்த நிலைமை... இடுகாடுகளில் நிரம்பி வழியும் சடலங்கள்..!

புதிதாக 4,01,993 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,91,64,969 ஆக உயர்ந்துள்ளது.

This is the situation in India ... Bodies overflowing in cemeteries
Author
India, First Published May 1, 2021, 10:32 AM IST

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3,523 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், சிகிச்சை பெறுவோர், இறப்பு விகித நிலவரம் குறித்து தினமும் காலை 9 மணியளவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  புதிதாக 4,01,993 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,91,64,969 ஆக உயர்ந்துள்ளது.This is the situation in India ... Bodies overflowing in cemeteries

புதிதாக 3,523 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,11,853 ஆக உயர்ந்துள்ளது. தொற்றில் இருந்து ஒரே நாளில் 2,99,988 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம், நாட்டில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,56,84,406 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 32,68,710 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

This is the situation in India ... Bodies overflowing in cemeteries

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் சதவிகிதம் 81.84% ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் சதவிகிதம் 1.11% ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் சிகிச்சை வெறுவோர் சதவிகிதம் 17.06% ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம், நாட்டின் இதுவரை 15,49,89,635 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios