சட்டப்பேரவை தேர்தல் அதிமுக தோல்விக்கு எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் பெயர்களை தலைவர்கள் அதிகளவில் பயன்படுத்தாதே காரணம் என அக்கட்சியின் முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

சட்டப்பேரவை தேர்தல் அதிமுக தோல்விக்கு எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் பெயர்களை தலைவர்கள் அதிகளவில் பயன்படுத்தாதே காரணம் என அக்கட்சியின் முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா குற்றம்சாட்டியுள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் முன்னாள் முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா மாவட்ட செயலாளர் முனியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய அன்வர் ராஜா;- எம்ஜிஆர்,ஜெயலலிதா பெயரை சொல்ல மறந்ததால் மக்களும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவை மறந்துவிட்டனர். 

தேர்தல் நேரத்தில் மக்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரை சொல்கிறார்களா என்று கவனிப்பார்கள். அப்படி அவர்களின் பெயரை சொல்லாமல் மறந்து போனவர்களை மக்களும் மறந்து விட்டனர். ஆகையால், தேர்தலில் அதிமுக தோல்வியடைந்து விட்டது. ஜெயலலிதா ஜெயிலுக்கு சென்ற போது 200 பேர் தற்கொலை செய்து கொண்டனர். ஜெயலலிதா உயிருடன் இருந்து இத்தேர்தலில் 70 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று ஜெயலலிதா முதலமைச்சர் பதவியை இழந்திருந்தால் 300க்கும் மேற்பட்ட கட்சியினர் தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள் என்றார். 

மேலும், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததால் ஆட்சிக்கு வர முடியவில்லை. இது குறித்து தொண்டர்கள் யாரும் வருத்தப்படவில்லை என அன்வர் ராஜா வேதனையுடன் தெரிவித்துள்ளார்.