This is the reason for BJP victory! Yogi Adityanath
காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தி வந்த நேரம் பாஜகவுக்கு நல்ல நேரமாக அமைந்துள்ளது என்று உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கிண்டலாக கூறியுள்ளார்.
குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்பட்டன. இந்த மாநிலங்களில் பாஜக அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.
குஜராத்தில், பாஜக 6-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சி கட்டலில் அமர்கிறது. இமாசல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி ஆட்சி அமைக்கிறது.
குஜராத்தில் உள்ள 182 மொத்த சட்டமன்ற தொகுதிகளில் பெரும்பான்மையைப் பெற 92 இடங்கள் தேவை. அந்த வகையில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
குஜராத், இமாச்சல் பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ள நிலையில், ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக வந்துள்ள நேரம்தான் பாஜகவுக்கு நல்ல நேரமாக அமைந்துள்ளது என்று உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
குஜராத், இமாச்சல் பிரதேச தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த யோகி ஆதித்யநாத், குஜராத் மக்களை மத ரீதியாக ராகுல் காந்தி பிரிக்க பார்த்தார். அவரது பிரச்சாரம் அப்படித்தான் இருந்தது. ஆனால், மக்கள் அதனை நிராகரித்து விட்டனர் என்று கூறினார்.
